ஆங்கிலத்தில் படிக்க...
லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரு பக்கம் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தாலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
2017-ம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய இவர், தற்போது விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார். மாநகரம் படத்தில் பல கிளைகதைகளை ஒரு நேர்க்கோட்டில் இணைக்கும் வகையில் திரைகத்தை அமைத்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.
மாநகரம் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அடுத்து அவர் இயக்கிய கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய 3 படங்களிலும் போதை பொருள் பழக்கம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் கட்டப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பினாலும் அடுதது இயக்கிய லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது வெளியான படத்தின் அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 5-ந் தேதி வெளியான படத்தின் டிரெய்லர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், படத்தில் அதிக வன்முறை காட்சிகள் மற்றும் விஜய் கெட்ட வார்த்தை பேசியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறையை அதிகம் காட்சிப்படுத்தியதாக வரும் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் அவற்றை விரும்புபவர்களும் இருக்கிறார்கள் என்று லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “போதை பொருளை அதிகம் வைத்து திரைப்படம் எடுப்பதாக விமர்சனம் வருகிறது. இந்த மருந்தை உட்கொள்வது உங்களுக்கு வல்லமையைக் கொடுக்கும் என்று நான் ஒரு திரைப்படத்தை உருவாக்கினால், அதற்காகதான் வெட்கப்பட வேண்டும். எனது ஹீரோக்கள் அனைவரும் போதையில்லா சமூதாயத்தை உருவாக்க போராடுகிறார்கள். அதனால் தான், போதைப்பொருள் என்ன என்பதைக் காட்டி முடிக்க வேண்டும். என்னுடையது என்னுடைய படங்களில் வன்முறை இருக்கிறது என்பதை நான் ஏற்கவில்லை. அவை ஆக்ஷன் படங்கள். இது உலகம் முழுவதும் பரவலாக உள்ள ஒரு வகை.
நாம் அனைவரும் தங்கள் அதிரடி ஹீரோக்களை நினைவில் வைத்திருக்கிறோம். விமர்சனங்களைப் பற்றி நான் அதிகம் கவலைப்படுவதில்லை. ஹாலிவுட் இயக்குனர் குவென்டின் டரான்டினோவின் அறிக்கையை சுருக்கமாக கூறி லோகேஷ் கனகராஜ் அவர் ஒருமுறை ஒரு நேர்காணலில், ‘ஹெவி மெட்டல் கச்சேரிக்கு சென்றால் அங்கு அதிக சத்தம் வருகிறது. நீங்கள் புகார் செய்ய முடியாது. நீங்கள் நீங்கள் எங்கு சென்றிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதேபோலத்தான் நீங்கள் என் படங்களுக்கு வந்தால், வன்முறையைப் பார்ப்பீர்கள்.’ இன்னொரு சந்தர்ப்பத்தில், அவருடைய படங்களில் ஏன் இவ்வளவு வன்முறை இருக்கிறது என்று கேட்டபோது, இது வேடிக்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் இரண்டு பேர் ஒருவரையொருவர் குத்திக்கொள்கிறார்கள். ஆனால், சினிமாவில், இசை மற்றும் பொழுதுபோக்கிற்காக அதையெல்லாம் பெரிதுபடுத்துகிறோம். ஒரு படம் பார்த்து மகிழ்வதற்காக இங்கே வாருங்கள்... அவ்வளவுதான். அப்படித்தான் நான் பார்க்கிறேன் என்று கூறியதாக தெரிவித்துள்ளர்
லியோ படத்தின் யு/ஏ சென்சார் சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் தணிக்கை அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் படத்தில் 13 இடங்களில் கட் செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய அவை அனைத்தும் இரத்தம், காயங்கள் மற்றும் வெடிப்புகளின் காட்சிகளாக இருந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“