ஆங்கிலத்தில் படிக்க : Lokesh Kanagaraj on plans for LCU: ‘New characters will come in; Vijay Sethupathi’s Sandhanam will be replaced’
லியோ படத்தின் வெளியீட்டை தொடர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்திற்காக சமூகவலைதளங்கில் இருந்து விலகியுள்ளார்.
லியோ படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக லியோ படம் குறித்து சமூகவலைதளங்களில் பேட்டி அளித்து வந்த லோகேஷ் கனகராஜ் எல்.சி.யூ.குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
இந்த பேட்டியில் தனது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய அவர், எல்.சி.யூ படங்களில் பழைய கதாபாத்திரங்களுக்குப் பதிலாக நிறைய புதிய கதாபாத்திரங்கள் இருக்கும். எல்.சி.யூ- யுனிவர்சின் அடுத்த படம் கைதி 2. தலைவர் 171-படத்துக்கு பிறகு கைதி 2 படத்திற்கான வேலைகள் தொடங்கும். அதன்பிறகு ரோலக்ஸ் மற்றும் விக்ரம் 2 ஆகிய படங்கள் குறித்த அப்டேட்கள் வெளியாகும்.
அதேபோல் அடுத்து இயக்க உள்ள தலைவர் 171 படம் எல்.சி.யூ யூனிவர்சின் ஒரு பாகமாக இல்லாமல் ஒரு தனிப் படமாக இருக்கும் “நான் ஏற்கனவே கைதி 2 படத்திற்கான அமைப்பை எழுதி முடித்துவிட்டேன். விரைவில் முழுவதையும் எழுத வேண்டும். இது எனது சொந்த மைதானம் என்பதால், மக்கள் என்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை நான் முன்வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து எல்.சி.யூ-வில் உள்ள கதாபாத்திரங்கள் பற்றி கேட்டபோது, “நிறைய புதிய கதாபாத்திரங்கள் இருக்கும். மற்ற ஒவ்வொரு படத்திலும் புதிய கதாபாத்திரங்கள் வரும். உதாரணத்திற்கு, சேது நா (விஜய் சேதுபதி) இப்போது இல்லை. அதனால் போதை பொருட்கள் விநியோகத்தை கவனிக்க அவர் இடத்திற்கு யாராவது வர வேண்டும். அதுபோல இறந்தவர்களின் இடத்திற்கு புதிய கதாபாத்திரங்கள் வரும் என்று கூறியுள்ளார்.
லியோ எல்.சி.யூ-ன் ஒரு பகுதியாக இருப்பதால், இப்போது சினிமா பிரபஞ்சத்தில் கமல்ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் கதைக்களத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் படத்தின் நட்சத்திர எண்ணிக்கை மிகப்பெரியதாகிவிட்டது. அது எப்படி வெளிவரும் என்பதில் மிகுந்த பரபரப்பு நிலவுகிறது. இந்த படத்தின் நீண்ட வரிசையின் மூலம், எல்.சி.யூ-ன் 'எண்ட் கேம்' பார்க்க குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.