Rajini-kanth | lokesh-kanagaraj: ‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகிது.
இந்நிலையில், ரஜினியின் 171 படம் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார் லோகேஷ். அப்போது இந்தப் படத்தில் கஞ்சா, போதை பொருட்கள் பின்னணியில் இருக்காது எனக் கூறியுள்ளார். அதேநேரம் படம் முழுக்க ஆக்ஷனாக இருக்கும் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார். லோகேஷின் மாநகரம் முதல் லியோ வரை, அவர் இயக்கியுள்ள 5 படங்களிலும் போதை பொருட்களான கஞ்சா, அபின் போன்றவையும் முக்கிய இடம் பிடித்தன
கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தும் வில்லன்களை அழிக்க லோகேஷின் ஹீரோ போராடுவார். போதைப் பொருட்கள் இல்லா இளைய சமூகம் உருவாக வேண்டும். அதனால் தான் அதன் பாதிப்புகள் குறித்து படங்கள் எடுப்பதாக லோகேஷ் கூறியிருந்தார். ஆனால், லோகேஷின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. பேருக்கு ட்ரக் ஃப்ரீ சோஷைட்டி என சொல்லிவிட்டு, படம் முழுக்க கஞ்சா, போதைப் பொருட்களுடன் ரத்தம் தெறிக்க ஆக்ஷன் காட்சிகள் வைப்பது தான் லோகேஷின் வழக்கம் என விமர்சிக்கிறார்கள்.
இதுவே அவரது லோகேஷ் படங்களின் வெற்றிக்கு காரணம் என விமர்சனங்கள் வந்தன. இதனால் லோகேஷ் கனகராஜ் திருந்திவிட்டாரோ என்னவோ? தலைவர் 171 போதைப் பொருட்கள் பின்னணியில் உருவாகவில்லை என லோகேஷ் பேசினார். ஆனால் ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது எனவும் லோகேஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் லோகேஷ் சினிமாட்டிக் வரலாற்றில் முதன்முறையாக கஞ்சா, போதைப் பொருட்கள் இல்லாமல் தலைவர் 171 உருவாக உள்ளது. எனவே, தலைவர் 171 கதை என்னவாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“