Advertisment

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணையும் ரஜினி - கமல்?

இது உண்மையாகிவிட்டால் அது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth and Kamal Haasan reunites

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

Rajinikanth - Kamal Haasan: முதல் படமான ’மாநகரத்திலேயே’ திறமையை நிரூபித்து பேசப்பட்ட இயக்குநரானார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் அவர் இயக்கிய 'கைதி' படம் வெளியாகி, வெற்றி பெற்றது.  அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்னும் பிரபலமானார்.

Advertisment

தற்போது அவர் நடிகர் விஜய்யின் அடுத்தப் படமான ‘தளபதி 64’ஐ இயக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து அவர் பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இரு பெரும் நட்சத்திரங்களும் ஒரே படத்தில் சேர்ந்து நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையாகிவிட்டால் அது ஒரு வரலாற்று தருணமாக இருக்கும். கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரையில் ஒன்று சேரும் அந்த வரலாற்றுத் தருணத்தை மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினிகாந்த்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'தர்பார் ’படத்தின் வேலைகளை சமீபத்தில் முடித்தார். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைகிறார். இதன் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் தொடங்குகிறார் ரஜினி. மறுபுறம், இயக்குநர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் கமல் ஹாசன். அடுத்ததாக அவர் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் நடிக்கிறார்.

Kamal Haasan Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment