Advertisment

லியோ-வில் எல்.சி.யு? உதயநிதியின் பதிவுக்கு லோகேஷ் கனகராஜின் ரியாக்‌ஷன்

லியோ படத்தில் எல்.சி.யு? அமைச்சர் உதயநிதியின் பதிவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்

author-image
WebDesk
New Update
Leo Lokesh Kanagaraj

லியோ படத்தில் எல்.சி.யு? அமைச்சர் உதயநிதியின் பதிவுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதில்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம், நாளை (அக்டோபர் 19) பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அமைச்சர் உதயநிதியின் பதிவு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகியுள்ள படம் லியோ. முழுமையான ஆக்‌ஷன் த்ரில்லர் படமான லியோவில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. 15 வருட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் த்ரிஷா இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறார்.

இவர்கள் தவிர அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள லியோ படம், நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தநிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லியோ படம் பார்த்த பிறகு தனது எக்ஸ் தளத்தில், தளபதி விஜய் அண்ணா லியோ… லோகேஷ் கனகராஜ் சிறப்பான இயக்கம், அனிருத் இசை, அன்பறிவு மாஸ்டர் சண்டைக்காட்சிகள், செவன்ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள், என்று பதிவிட்டு, மேலும் எல்.சி.யு (LCU) என எழுதி கண்ணடிக்கும் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை லைக் செய்து வரும் விஜய் ரசிகர்கள், படம் எல்.சி.யூ-வின் தொடர்ச்சியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம், அமைச்சர் உதயநிதியின் பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உதயநிதி பதிவு மூலம் லியோ படத்தில் எல்.சி.யு இருப்பதாக தெரிகிறது, அது உண்மையா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எல்.சி.யு-க்கு பக்கத்தில் கண்ணடிக்கும் எமோஜி இருக்குதல்லவா, அதனால் நாளை காலை தான் தெரியும் என கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Lokesh Kanagaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment