/indian-express-tamil/media/media_files/Pd7HhQRkqluYkMlbhBd8.jpg)
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', லியோ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.
Lokesh-kanagaraj | facebook: தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்து.
தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படைப்பாக 'பைட் கிளப்' என்ற திரைப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பெயரில் பேஸ்புக் தளத்தில் ஆபாச வீடியோ பரவியது. இதனையடுத்து, லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். "நான் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். வேறெந்த சமூக வலைதளத்தில் இல்லை. வேறு தளங்களில் என் பெயரில் கணக்குகள் இருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். அன் பாலோ செய்து விடவும்" என்று அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Hey all, I’m only available on Twitter and Instagram, I do not have or use any other social media accounts. Please feel free to ignore and unfollow any other hoax accounts!
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 13, 2023
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.