ஆங்கிலத்தில் படிக்க...
விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ திரைப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடத்தியது ஏன் என்பது குறித்து படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள படம் லியோ, த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக இருக்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்டது.
ஆனால் லியோ படம் தொடங்கும்போது படப்பிடிப்பை, தேனி மாவட்டத்தில் உள்ள சிறிய நகரத்திலோ அல்லது தமிழ்நாட்டின் சில பகுதிகளிலோ தான் படப்பிடிப்பை நடத்த விரும்பியதாக தெரிவத்துள்ள லோகேஷ் கனகராஜ், தவிர்க்க முடியாத சில காரணங்களால் காஷ்மீரில் நடத்தியதால் தெரிவித்துள்ளார். இந்திய க்ளிக்ஸூடன் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
“படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டதற்கான காரணம் முற்றிலும் வேறுபட்டது. படம் சிறப்பாக வேண்டும் என்று நாங்கள் விரும்பியதால், பல இடங்களுக்கு நேராடியாக சென்று படமாக்க விரும்பினோம். தேனியில் ஒரு கிராமத்தை வைத்து கதையை எழுதினேன். அந்த ஏரியாவில் லொகேஷன் ஸ்கூட்டிங் கூட ஆரம்பிச்சோம். ஆனால் ஒரு பெரிய கூட்டம் எங்களைச் சுற்றி திரண்டதால் அங்கு எங்களால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.
அதனால் தான், அவரை (விஜய்) அங்கு படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நாள் நெருங்கிவிட்டதால், ஒரே வழி வெளிநாட்டில் படமெடுப்பதுதான், ஆனால் நான் எந்த வெளிநாட்டையும் பார்த்ததில்லை. அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதனால் தான் நாங்கள் காஷ்மீரைத் தேர்ந்தெடுத்தோம்.
காஷ்மீரில் நிலப்பரப்பு மாறிவருவதால், ஆராய்வதற்கு ஏதாவது இருக்கும் என்று நினைத்தோம். படத்திற்கு உதவுவதைத் தாண்டி, விஜய்யுடன் யதார்த்தமான விஷயங்களை படமாக்க லொகேஷன் உதவியது. படப்பிடிப்பைத் தவிர, விஜய் அண்ணா அந்த இடத்தை நடந்தே சுற்றிப் பார்க்கத் தொடங்கினார். அவரே ரசிக்க ஆரம்பித்தார். இதே நிலையை தமிழ்நாட்டில் வேறு எங்கு அதைச் செய்ய முடியாது. கூட்டத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதால் விஜய் நிறைய செய்ய முடியும் என்று லோகேஷ் கூறினார்.
ஒரு நாள், நான் அவர் சுதந்திரமாக இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டு அவரை என் அறைக்கு அழைத்துச் சென்றேன். ‘அசிஸ்டெண்ட்ஸ்கிட்ட போய் குழப்பலாம்’னு சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு அறை கதவை திறந்து அனைத்து உதவியாளர்களையும் ஸ்தம்பித்த வைத்து அதிர்ச்சியில் ஆழ்த்தினோம் என்று தெரிவித்துள்ளார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“