Advertisment

Losliya Army: பிக்பாஸ்ல இந்த முறை லாஸ்லியா ஆர்மி தான் டிரெண்ட்!

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் லாஸ்லியாவுக்கு, தங்களது ஆத்மார்த்தமான ஆதரவை அளித்து வருகிறார்கள் ரசிகர்கள். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Losliya Army, Bigg Boss Tamil 3

Losliya

Bigg Boss Tamil 3: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 10 நாட்கள் கடந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisment

ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளருக்கு ஆர்மி, கிரியேட் செய்து கொண்டாடுவது பிக்பாஸ் போட்டியாளர்களின் வழக்கம். கடந்த 2 சீசன்களில் ஓவியா ஆர்மிக்கே அதிக வரவேற்பு கிடைத்தது. இம்முறை இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன், சண்டையிடாத மற்றும் ஆதரவு மனப்பான்மைக்காக ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.

முதல் சீசனில் ஓவியா பெற்றதைப் போலவே, ஆன்லைனில் ஆர்மியையும் பெற்றிருக்கிறார் லாஸ்லியா. இதன்மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் லாஸ்லியாவுக்கு, தங்களது ஆத்மார்த்தமான ஆதரவை அளித்து வருகிறார்கள் ரசிகர்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள், ஆயிரக் கணக்கான ஃபாலோயர்களுடன், பல சமூகவலைதள கணக்குகள் லாஸ்லியாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

முதல் சீசனில் ஒவியாவின் ஆளுமை ஜாலியானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது, ஆனால் லாஸ்லியா கடுமையான மோதலின் போதும், எதையும் கண்டுக்கொள்ளாமல், வீட்டிலுள்ள அனைவருடனும் கலந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார். ஒரு வாக்குவாதத்தில் கஞ்சா கருப்பை, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்று கூறியதற்குப் பிறகு ஓவியா கவனிக்கப்பட்டார். ஆனால் லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டில் தினமும் காலையில் டான்ஸ் ஆடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

இருப்பினும் லாஸ்லியாவால், ஓவியாவாக முடியாது என்கிறார்கள் ஓவியா விசிறிகள்.

இலங்கையில் கிளிநொச்சியில் பிறந்த லாஸ்லியா, இலங்கையின் முதல் தமிழ் தொலைக்காட்சியான சக்தி டி.வி-யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார். அந்த சேனல் சன் டி.வி மற்றும் விஜய் டி.வி-யிலிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி ஒளிபரப்பியும் வருகிறது. பிக்பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டதற்குப் பிறகு லாஸ்லியாவின் பழைய செய்தித் தொகுப்புகளை யூ-ட்யூபில் தேடி எடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இதன் மூலம் அந்த சேனலும் அதிக சப்ஸ்க்ரைபர்களைப் பெற்றுள்ளது.

 

Bigg Boss Tamil Bigg Boss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment