/tamil-ie/media/media_files/uploads/2019/10/Losliya-dance-video.jpg)
Losliya
Thalapathy Vijay: தனியார் தொலைக்காட்சியில் 3 மாதங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த ரியாலிட்டி ஷோ-வின் டைட்டிலை மலேசியாவைச் சேர்ந்த பாடகர், முகன் ராவ் பெற்றார். அவரைத் தொடர்ந்து சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
. Had a great time dancing with these lovelies yesterday ???????? pic.twitter.com/y8ZW7SGQtq
— Losliya Mariyanesan Fan???? (@Losliyamaria96) October 9, 2019
இந்த சீசனில் மக்களுக்குப் பிடித்த போட்டியாளர்களில் ஒருவராக மாறியுள்ளார் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவரது இலங்கை தமிழ் உச்சரிப்புக்காக ரசிகர்களால் அதிகம் விரும்பப்படுகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, போட்டியாளர்கள் தங்களுக்குப் பிடித்த பாடல்களுக்கு நடனமாடுவது ஒரு டிரெண்டாக மாறியுள்ளது.
இவர்களுக்கு தளபதி விஜய்யின் ஃபீவர் தொற்றிக் கொண்டிருக்கிறது போல. ஒரு நடன ஸ்டுடியோவில் ’பிகில்’ படத்தில் விஜய் பாடியிருக்கும் ’வெறித்தனம்’ பாடலுக்கு நடனமாடியிருந்தார் தர்ஷன். நகைச்சுவையால் மக்கள் மனங்களை கவர்ந்த சாண்டியும் அவரது குட்டி இளவரசி, லாலாவும் அதே பாடலுக்கு நடனமாடியிருந்தனர்.
இந்த வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகிவிட்ட நிலையில், இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளது லாஸ்லியாவின் நடனம். ‘தளபதி விஜய்’ நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படமான ’சச்சின்’ படத்தில் இடம்பெற்றிருக்கும், ”வாடி வாடி பாடலுக்கு” நடனமாடி மகிழ்ந்திருக்கிறார் லாஸ்லியா! தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.