Bigg Boss Losliya : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார் இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா.
அந்நிகழ்ச்சி முடிந்ததும் கடந்த சில வாரங்களாக தனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட்டார். தற்போது மீண்டும் சென்னை திரும்பியிருக்கிறார். அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
நாம செமயா வாழந்து காட்றதுதான்
நாம வாழவே கூடாதுனு நினக்கிறவங்களுக்கு கொடுக்குற பெரிய தண்டன..போலாம் ரைட்….????????#Losliya ???? #LosliyaArmy pic.twitter.com/2FpapaH0FU
— Losliya Army ???? (@LosliyaFC1) November 13, 2019
முன்னதாக லாஸ்லியாவின் தோழி தர்ஷி, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கோழி குஞ்சு பொரிப்பதையும், நட்சத்திரத்தையும் சுட்டிக்காட்டும் விரல் எமோஜிக்களை பதிவிட்டிருந்தார். லாஸ்லியாவின் திரைப்பட அறிமுகம் தான் இது என்று லாஸ்லியா ஆர்மியினர் யூகித்தனர். படத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் அவரது இலங்கை நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.