Advertisment

தந்தையின் இழப்பு ஆறாத் துயரம்... லாஸ்லியா ஃபேமிலி இப்போ எப்படி இருக்காங்க?

லாஸ்லியா அவரது அம்மா, சகோதரியுடன் இருக்கும் அழகான ஃபேமிலி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Losliya Mariyanesan

Losliya Mariyanesan Sari photo collections

இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் லாஸ்லியா மரியநேசன். இலங்கையில் செய்திவாசிப்பாளராக ரசிகர் பட்டாளத்தை சேர்த்த லாஸ்லியா தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிக்பாஸ் சீசன் 3 போட்டி மூலமாக அறிமுகமானார். இவரின் யாழ்ப்பாண தமிழை கேட்கவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். மேலும், சாண்டி மாஸ்டர், கவின், தர்ஷன், முகின் ராவ் எனப் பலர் இருந்ததால் அந்த சீசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பிக்பாஸ்ல காதல் கிசுகிசு இல்லாமையா?. எந்த மொழி பிக்பாஸை எடுத்துக்கிட்டாலும் இந்த டாப்பிக் வராமல் இல்லை. இப்ப நடந்து முடிந்த சீசன் அமீர்-பாவனி ஜோடி வரை. காதல் டாப்பிக் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

Advertisment

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் லாஸ்லியா-கவின் நெருங்கி பழகினர். சாண்டி மாஸ்டர், கவின், தர்ஷன், லாஸ்லியா என ஓர் அணியாக இருந்தனர். லாஸ்லியா-கவின் நெருங்கி பழகி வந்த நிலையில், இதற்கு லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிலே நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். பிக்பாஸ் வீட்டில் 50 நாட்கள் கடந்த பின் போட்டியாளர்களின் பெற்றோர், உறவினர் பார்க்க அனுமதிக்கப்படுவர்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பரிசு கொடுத்து பார்த்துச் செல்வர். அவ்வகையில் லாஸ்லியாவின் பெற்றோரும் இலங்கையிலிருந்து வந்திருந்தனர். அவரது தந்தை வெளிநாட்டிலிருந்து இந்நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். லாஸ்லியா-கவின் நெருங்கி பழகியதற்கு அவரது தந்தை கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். கவினிடமும் அவர் இதுபற்றி பேசினார். நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் அவர்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் லாஸ்லியாவின் தந்தை உயிரிழந்தார். பிக்பாஸ் பிரபலங்கள் முதல் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில், லாஸ்லியா ‘ஃப்ரெண்ட்ஷிப்’படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதன்பின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. தற்போது மெலிந்த தோற்றத்தில் இருக்கும் லாஸ்லியா தனது அம்மா, சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நான் இவர்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Bigg Boss Tamil Losliya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment