காதலை பிரிக்க என்ன தைரியும் உனக்கு? தியேட்டரில் நடிகரை தாக்கிய பெண்; வைரல் வீடியோ!

படத்தில் காதல் ஜோடியை பிரிக்கும் கேரக்டரில் நடித்திருந்த ஒரு நடிகரை ஒரு பெண் நேரில் சராமாரியாக தாக்கியுள்ளார்.

படத்தில் காதல் ஜோடியை பிரிக்கும் கேரக்டரில் நடித்திருந்த ஒரு நடிகரை ஒரு பெண் நேரில் சராமாரியாக தாக்கியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Love Reddy

தெலுங்கு திரையுலகில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த லவ் ரெடி திரைப்படத்தில், நடித்த ஒரு நடிகர் படக்குழுவினருடன் படம் பார்க்க வந்திருந்தபோது, அந்த நடிகரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தெலுங்கு சினிமாவில் சிம்ரன் ரெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் லவ் ரெடி. வனி சன்னன்ரார்யபதன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஷர்வானி கிருஷ்ணவேனி நாயகியாக நடித்துள்ளார். காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக  இளைஞர்கள் மத்தியில் இந்த படம் பெரிய கவனம் ஈர்த்து வருகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா பார்க்கும் ரசிகர்கள் அதில் ஒன்றிப்போய், அதில் வரும் கேரக்டர்கள் உண்மையாக தங்கள் ரியல் வாழ்க்கையில் அப்படியே இருப்பார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். அந்த வகையிலான ஒரு சம்பவம் இந்த படத்திலும் நடந்துள்ளது. ஒரு நடிகரையோ அல்லது குழும நடிகர்களின் நடிப்பையோ மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கோபத்தின் கொந்தளிப்பில் யதார்த்தத்தை மறந்து உணர்ச்சிவசப்படுவார்கள்.

இந்த வகையில் லவ் ரெட்டி படத்தில், காதல் ஜோடியை பிரிக்கும் கேரக்டரில் நடித்திருந்த நடிகர் என் டி ராமசாமி படக்குழுவினருடன் ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றபோது ஒரு பெண் ரசிகை ஒருவர் ராமசாமியை தியேட்டரில் வைத்து தாக்கியுள்ளார். படத்தின் பிரமோஷன் பணிக்காக, படக்குழுவினர் தியேட்டருக்கு வந்திருந்தபோது, தியேட்டரில் திடீரென நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

நடிகரை தாக்கிய அந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் கட்டுப்படுத்தி அழைத்து சென்றனர். இதன் மூலம் உண்மைக்கும் சினிமாவுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே அந்த நடிகரை பெண் தாக்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: