கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நவ.4ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் லவ் டுடே.
இன்றைய கால காதலை செல்போனை மையப்படுத்தி ரசிக்கும்படி பேசியிருப்பார் இயக்குனரும் கதாநாயகனுமான பிரதீப் ரங்கநாதன்.
மறுபுறம், கதாநாயகியின் தந்தையாக சத்யராஜ் வேற லெவலில் பின்னி பெடல் எடுத்திருப்பார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
-
நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில், லவ் டுடே திரைப்படம் வெளியாகிறது.
காதலர்கள் இருவரும் தங்களுக்குள் மொபைல் போனை மாற்றிக் கொள்வதுதான் படத்தின் மையக் கதை. அதன் பின்னர் நடக்கும் ஊடல், காதல், சண்டைதான் மீதிப் படம்.
இரண்டாம் படத்திலே இயக்குனராகவும், நடிகராகவும் முத்திரை பதித்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படம் இதுவரை ரூ.70 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil