/tamil-ie/media/media_files/uploads/2017/11/sinekan.jpg)
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடலாசிரியர் சினேகன், 200 அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட காட்சி ‘’எவனும் புத்தனில்லை’’ என்ற படத்துக்காக சென்னை, மலேசியாவில் படமாக்கப்பட்டது.
அதிக பொருட் செலவில் தயாராகும் படம் ‘’எவனும் புத்தனில்லை’’. நபிநந்தி, ஷரத் ஆகியோர் காதாநாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகிகளாக நிகாரிகா, சுவாதிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
'’உலகத்தில் பெரும்பாலான உயிரினங்கள் தன் இனத்தை தானே வேட்டையாடி அழிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பது போல் இரு பாலினமும் தன் சுயநலத்திற்காக ஒருவரை ஒருவர் வேட்டையாடி நாகரீகம் என்ற பெயரில் நகரத்தின் ஒட்டு மொத்த சுயநல மனிதக் கூட்டங்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிராக, 6000 அடி உயர மலைகிராமத்தில் வெள்ளந்தியாக வாழ்ந்த இளைஞன் மருத்துவக் கல்லூரி மாணவனுடன் இணைந்து நடத்தும் யுத்தமே, ’’எவனும் புத்தனில்லை’’ படத்தின் கதை.
இந்த படத்தில் சினேகன் எழுதி அவரே நடித்த பாடல் காட்சி ஒன்று மலேசியா, சென்னை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டது. “எதுவும் தப்பில்லை எவனும் புத்தனில்லை “ என்ற பாடல் காட்சி இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் 200 நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.