தேவாரம், திருவாசகம்னு நினைச்சேன்... நீ எழுதுன பாட்டா? வாலி பாடலை பாராட்டி கண்ணதாசன் வைத்த கோரிக்கை
கவிஞர் கண்ணதாசனுடனான தனது ஒரு அனுபவம் குறித்து கவிஞர் வாலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன்னுடைய பாடலை கேட்டு, கண்ணதாசன் தனக்கு வைத்த கோரிக்கை ஒன்றையும் வாலி குறிப்பிட்டுள்ளார்.
கவிஞர் கண்ணதாசனுடனான தனது ஒரு அனுபவம் குறித்து கவிஞர் வாலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன்னுடைய பாடலை கேட்டு, கண்ணதாசன் தனக்கு வைத்த கோரிக்கை ஒன்றையும் வாலி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகை பொறுத்தவரை கவிஞர்கள் வாலி மற்றும் கண்ணதாசன் ஆகிய இருவரும் காலத்தால் அழிக்க முடியாத பெரும் நினைவலைகளை விட்டுச் சென்றவர்கள். இன்று வரை இவர்களது பாடல்களை நினைத்து சிலாகிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அற்புதமான படைப்பை இவர்கள் வழங்கியுள்ளனர்.
Advertisment
பாடல் எழுதுவதில் வல்லவர்களான இருவரும், ஒருவரையொருவர் பெருமளவு பாராட்டியுள்ளனர். அந்த வகையில் கவிஞர் கண்ணதாசனுடனான தனது ஒரு அனுபவம் குறித்து கவிஞர் வாலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, தன்னுடைய பாடலை கேட்டு, கண்ணதாசன் தனக்கு வைத்த கோரிக்கை ஒன்றையும் வாலி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், "கண்ணதாசன் ஒரு மாபெரும் சகாப்தம். கண்ணதாசன் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக வாகினி ஸ்டூடியோவில் என்னை சந்தித்தார். அப்போது, அமெரிக்க பயணம் ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பினேன். விரைவாக அங்கிருந்து திரும்பி விடுவேன் என்று என்னிடம் கூறினார். ஆனால், அவர் திரும்பவில்லை.
எனினும், அமெரிக்கா செல்வதற்கு முன்பாக 1968-ஆம் ஆண்டில் கே.வி. மகாதேவன் இசையில் நான் எழுதிய 'ஓதுவார்' பாடல் குறித்து கண்ணதாசன் என்னிடம் கேட்டார். அப்பாடலை தேவாரம், திருவாசகம் என்று தான் கருதியதாகவும், அதன் பின்னர் அந்தப் பாடலை நான் எழுதியதை அவர் அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
Advertisment
Advertisements
மேலும், தாம் இறந்து விட்டால் அவரைப் பற்றி நான் பாட வேண்டும் என்று என்னிடம் கண்ணதாசன் கூறினார். அவர் கூறிய வாக்கு அப்படியே நடந்தது. கண்ணதாசன் மறைந்து சுமார் 10 நாட்களுக்கு பின்னர் ஒரு கவியரங்கம் நடத்தப்பட்டது. அதில், நான் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது நான் ஒரே வரி மட்டும் கூறினேன். அதன்படி, எழுதப் படிக்க தெரியாதவர்கள் எத்தனையோ பேரில் எமனும் ஒருவன்; அழகிய கவிதை புத்தகத்தை கிழித்துப் போட்டு விட்டான் என்று கூறினேன்" என வாலி தெரிவித்தார்.