/indian-express-tamil/media/media_files/2025/09/16/silk-2025-09-16-12-00-00.jpg)
சில்க் ஸ்மிதாவுக்கு மட்டும் 60 பாட்டு எழுதினேன்; அதுக்கு காரணம் இந்த ஒரு பாட்டு தான்; கவிஞர் வாலி சொன்ன ரகசியம்!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் கவிஞர் வாலி. 50 ஆண்டுகாலமாக திரையுலகில் கோலோச்சிய கவிஞர் வாலி, தமிழ் திரையுலகில் அதிகப்படியான பாடல்களை எழுதி சாதனை படைத்தவர் என்றே கூறலாம். இளையராஜா - வாலி கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.
’ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு’, ‘தொட்டால் பூ மலரும், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, ‘இந்த புன்னகை என்ன விலை’, ‘காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘நேத்து ராத்திரி யம்மா’ போன்ற ரசிகர்களை கவரும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
அதிலும், ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடல் அன்று முதல் இன்று வரை அனைவரையும் கவரும் பாடலாக உள்ளது. இந்த பாடல் வெளியான பிறகு நடிகை ஷில்க் சுமிதாவிற்கு மட்டுமே ஒரு வருடத்தில் 60 பாடல்கள் எழுதினாராம் கவிஞர் வாலி.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “ ‘சகலகலா வல்லவன்’ படத்தில் இளமை இதோ இதோ, இனிமை இதோ இதோ என்று பாடல் நான் எழுதிவிட்டேன். அப்போது குமரன் சார், சரவணன் சார் எல்லாம் உட்காந்திருந்தார்கள். அப்போது குமரன் சார் சொன்னார் என்ன வாலி சார் லிரிக் இது என்று கேட்டார்.
நான் சொன்னேன் இது இசையமைக்கும் போது வசீகரமாக மாறிவிடும் என்றேன். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இளையராஜா மிகவும் பிரம்மாண்டமாக இசையமைத்ததில் அந்த பாடல் ரொம்ப வசீகரமானது. ஒவ்வொரு வருடமும் அந்த பாடலை புத்தாண்டு அன்று எல்லோரும் போடுகிறார்கள்.
அதுதான் ஒரு பாடலை மெட்டு போடும் போது அது சுமாராக இருந்தால் கூட இசையமைப்பில் அது பெரிய வெற்றி பெரும். ’நேத்து ராத்திரி யம்மா’ பாடல் மிகப் பிரம்மாண்டமான ஹிட்டானது. அதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அந்த படத்தில் வேலை பார்த்த கலைஞர்களுக்கு எல்லாம் ஒரு சின்ன பெட்டியில் ஒரு சவரன் தங்கம் வைத்து கமல்ஹாசன் கொடுத்தார். அந்த படத்தில் அந்த பாட்டு வந்த பிறகு ஒரு வருடத்தில் சில்க் ஸ்மிதாவிற்கு மட்டுமே நான் 60-வது பாடல் எழுதினேன்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.