scorecardresearch

கருத்து வேறுபாடு காரணமாக, தனுஷ் படத்திலிருந்து விலகிய பிரபலம்

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷின் மாறன் படத்திலிருந்து வெளியேறிவிட்டேன்; பாடலாசிரியர் விவேக் ட்வீட்

கருத்து வேறுபாடு காரணமாக, தனுஷ் படத்திலிருந்து விலகிய பிரபலம்

Lyricist Vivek quits Dhanush Maaran movie for creative differences: கருத்து வேறுபாடு காரணமாக, தனுஷின் மாறன் படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக, பாடலாசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’. இந்த திரைப்படம் மார்ச் 11-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் படம் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த படத்திற்கு பாடலாசிரியர் விவேக், வசனம் மற்றும் திரைக்கதை எழுதியதாக கூறப்பட்டது. ட்ரெய்லரில் வெளியான வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் விவேக்கை பாராட்டி வந்தனர்.

இந்தநிலையில், பாடலாசிரியர் விவேக், மாறன் படத்திற்கு நான் வசனம் மற்றும் திரைக்கதை எழுதவில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாறன் ட்ரெய்லர் மற்றும் டயலாக்குகள் மீது இவ்வளவு அன்பை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களில் பலர் சுட்டிக்காட்டியபடி, மாறன் ஒரு ஸ்டைலான, வணிக மற்றும் உணர்ச்சிகரமான படமாக வெளிவருகிறது. உங்களைப் போன்றே படத்தைப் பார்ப்பதற்கு நானும் ஆவலாக இருக்கிறேன். ஆனால் அந்த வசனங்கள் என்னுடையது அல்ல. வசனங்களை எழுதியவருக்கு அந்த புகழ் சேரும். படைப்பு வேறுபாடுகள் காரணமாக நான் மாறனிலிருந்து உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக வெளியேறிவிட்டேன். எனது முடிவை மதித்த படக்குழுவிற்கு நன்றி. இன்று நான் ஒரு உரையாடல் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒரு பகுதியாக இருக்கிறேன். மாறன் தொடக்கப் புள்ளியாக இருந்ததை எப்போதும் நினைவில் கொள்வேன்.

இதையும் படியுங்கள்: இரவில் தி.நகர் பிளாட்ஃபார்மில் தூங்கும் எஸ்.ஏ.சி: அவரே பேசிய ஷாக் வீடியோ

என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்ததற்காக, சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் சார், அர்ஜுன், சித்தார்த், செந்தில், பிரசாந்த் சகோதரர்களுக்கு நான் நிறைய நன்றி கடன்பட்டிருக்கிறேன். தனுஷ் போன்ற சிறந்த கலைஞரிடம் இருந்து நான் பெற்ற அனைத்து கற்றல்களுக்கும் நான் தனுஷ் சாருக்கு நிறைய நன்றி கடன்பட்டிருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இயக்குனர் சகோதரர் கார்த்தி நரேனுக்கு நன்றி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சத்யஜோதி பிலிம்ஸின் அன்பறிவு படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். அதனால் இந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க முடியாது. அடுத்ததாக, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் பணிபுரிகிறேன். மாறன் படம் சிறப்பாக இருக்கும், உங்களுடன் சேர்ந்து கொண்டாட நானும் காத்திருக்கிறேன். வெற்றிக் கூட்டணியான தனுஷ்-அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன். மீண்டும் அந்த அன்பு கூட்டணியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Lyricist vivek quits dhanush maaran movie for creative differences

Best of Express