'ஊதா கலரு ரிப்பன்' என் படத்தில் இப்படி ஒரு கேவலமான பாட்டா? ரிஜக்ட் செய்த பிரபல இயக்குனர்: யார் தெரியுமா?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பன்' பாடலை முதலில் ஒரு இயக்குநர் தனது படத்தில் வேண்டாம் என்று நிராகரித்ததாக பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊதா கலரு ரிப்பன்' பாடலை முதலில் ஒரு இயக்குநர் தனது படத்தில் வேண்டாம் என்று நிராகரித்ததாக பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
VVS Song

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம், ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். சிவகார்த்திகேயன் மட்டுமின்றி இயக்குநர் பொன்ராம், சூரி உள்ளிட்ட பலருக்கு அப்படம் அடையாளம் கொடுத்தது. இப்படத்திற்கு இமானின் இசை பெரும் பலமாக அமைந்தது. ஏனெனில், அவரது இசையில் அமைந்த அனைத்து பாடல்களும் அன்றைய சூழலில் பெரும் ஹிட்டடித்தன.

Advertisment

குறிப்பாக, இப்படத்தில் 'ஊதா கலரு ரிப்பன்' என்ற பாடல் வைரல் ஹிட்டானது. இந்தப் பாடல் உருவான விதம் குறித்து பாடலாசிரியர் யுகபாரதி ஒரு நிகழ்வின் போது பகிர்ந்து கொண்டார். அதிலும், இந்தப் பாடலை முதலில் இயக்குநர் எழில் நிராகரித்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

Advertisment
Advertisements
Director Ezhil
இயக்குநர் எழில்

 

 

அதில், "வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் இடம்பெற்றது. ஆனால், அந்தப் படத்திற்காக அப்பாடலை எழுதவில்லை. முன்னதாக தேசிங்கு ராஜா திரைப்படத்திற்காக, நானும், இசையமைப்பாளர் இமானும் இப்பாடலை உருவாக்கினோம். அப்படத்தின் இயக்குநர் எழிலுக்காக சுமார் 60 பாடல்கள் நான் எழுதி இருக்கிறேன்.

எந்தப் பாடல் குறித்தும் தனது விமர்சனத்தை அவர் கூறியதில்லை. ஆனால், 'ஊதா கலரு ரிப்பன்' பாடலைக் கேட்டதும், நமது படத்திற்கு இப்படி ஒரு கேவலமான பாடல் தேவையா என்று இயக்குநர் எழில் கேட்டார். எனக்கும், இசையமைப்பாளர் இமானுக்கும் சங்கடமாகி விட்டது. அப்போது, தேசிங்கு ராஜா திரைப்படத்தை எடுத்த தயாரிப்பு நிறுவனத்தினர் தான், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தையும் எடுத்தனர். அதனால், அந்தப் படத்திற்கு இந்தப் பாடலை பயன்படுத்தலாம் என்று இமான் யோசனை சொன்னார்.

அதன்படி, இந்தப் பாடலுக்கு பெரிய பில்ட்-அப் கொடுத்து இயக்குநர் பொன்ராமிடம் கூறினோம். அவருக்கும் இந்தப் பாடல் பிடித்து விட்டது. அந்த வகையில், கேவலம் என்று கூறி இயக்குநர் எழில் ஒதுக்கிய 'ஊதா கலரு ரிப்பன்' பாடலை மக்கள் கொண்டாடினர்" என்று பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார். ஒரு இயக்குநருக்கு பிடிக்காத பாடல், மற்றொரு இயக்குநருக்கு மிகவும் பிடித்ததாக மாறி, அதுவே பெரிய ஹிட்டான சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: