தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் மாமன்னன். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது இனி உதயநிதி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்றார்.
தொடர்ந்து அவருக்கு அதை விட முக்கிய பொறுப்புகள் உள்ளன என்றார். மேலும் மாமன்னன் படம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, அந்தப் படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றும் சூட்டிங்கின் போது கலந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என சபரீசன் பேசியது தற்போது அரசியல் டாக் ஆகிவருகிறது. உதயநிதியின் அமைச்சர் பொறுப்பை சுட்டிக் காட்டி அவர் அவ்வாறு பேசினாரா? அல்லது உதயநிதிக்கு துணை முதல்வர் போன்று வேறு ஏதேனும் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் படங்களில் நடிக்க போவதில்லை எனக் கூறிய உதயநிதி, தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் அது பற்றி யோசிக்க போவதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“