/tamil-ie/media/media_files/uploads/2020/06/M-Night-Shyamalan-Tamil-Cinema-News.jpg)
M Night Shyamalan, Tamil Cinema News
ஹாலிவுட் இயக்குனர் எம் நைட் ஷியாமளன் வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் பழைய படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 49 வயது திரைப்பட இயக்குநரான அவர், தனது 21-ம் வயதில் அவரது முதல் பட படபிடிப்பில் எடுத்துக் கொண்ட படத்தை பதிவிட்டுள்ளார்.
Me directing my first film in Chennai, India at 21. #tbt It played in two theaters for a few weeks. #perseverepic.twitter.com/jFgp31Foud
— M. Night Shyamalan (@MNightShyamalan) June 18, 2020
பிரைட் சிவப்பு ஜாக்கெட், தொப்பி அணிந்த திரு ஷியாமளன், படக் குழுவினருடன் சிரிப்பதை அந்த படத்தில் காணலாம். "எனது முதல் படத்தை இந்தியாவின் சென்னையில் 21 வயதில் இயக்கினேன். இரண்டு வாரங்கள் இரண்டு திரையரங்குகளில் ஓடியது" என அந்தப் படத்துடன் குறிப்பிட்டிருந்தார். 1992-ம் ஆண்டு ’பிரேயிங் வித் ஆங்க்ரி’ திரைப்படத்தில் ஷியாமளன், இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார். இருப்பினும், அவர் இயக்கத்தில் புரூஸ் வில்லிஸ் நடித்த, ’தி சிக்ஸ்த் சென்ஸ்’ படம் திருப்புமுனையாக அமைந்தது.
எம் நைட் ஷியாமளன், வழக்கத்திற்கு மாறான கதை சொல்லும் பாணியில் நன்கு அறியப்பட்டவர். தனது சமூக ஊடக கணக்குகளில் அடிக்கடி த்ரோபேக் படங்களை பகிர்ந்து கொள்கிறார். கடந்த மாதம், அவர் தனது குழந்தை பருவ படத்தைப் பகிர்ந்துக் கொண்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.