கவிஞர் எழுத, எம்.எஸ்.வி இசை அமைக்க... 10 நிமிஷத்தில் பாட்டு ரெடி; நாகேஷ் படத்தில் நடந்த சுவாரசியமாம்

தமிழ் சினிமாவோடு இரண்டறக் கலந்து விட்ட இசையமைப்பாளர் என்றால் அது எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அவர் ஒரு பாடலுக்கு 10 நிமிடத்தில் இசையமைத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.

தமிழ் சினிமாவோடு இரண்டறக் கலந்து விட்ட இசையமைப்பாளர் என்றால் அது எம்.எஸ்.விஸ்வநாதன் தான். அவர் ஒரு பாடலுக்கு 10 நிமிடத்தில் இசையமைத்திருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
msv

எம்.எஸ்.வி.யின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளலும், துடிப்பும் நிச்சயம் கலந்திருக்கும். நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம்பெற்ற எங்கேயும், எப்போதும் பாடல் நிச்சயம் கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும்.

Advertisment

மனதை மயக்கும் இனிமையான பாடல்களைத் தந்ததாலேயே அவருக்கு மெல்லிசை மன்னன் என்ற பட்டம் கிடைத்தது. கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.வி.

சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், அஜீத் என மூன்று தலைமுறைகளைத் தாண்டி பணிபுரிந்தவர் எம்.எஸ்.வி. ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் என பாராபட்சமின்றி தனது இசையை அள்ளி வழங்கிய வள்ளல் அவர்.

இசையமைப்பதோடு நிறுத்தி விடாமல், சில பாடல்களை தந்து வித்தியாசமான குரலால் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.வி. 'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான், தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்' என பாடல் வரிகளை உண்மையாக்கியவர்.

Advertisment
Advertisements

காலத்தால் அழியாத பலப் படங்களைக் கொடுத்த எம்.எஸ்.வி. தனது இசையில் மட்டுமின்றி, இளையராஜா, தேவா, கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோரது இசையிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.

இசையமைப்பாளராக மட்டுமின்றி, குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை நிரூபித்தவர் எம்.எஸ்.வி. தமிழில் சுமார் 10 படங்களில் அவர் நடித்துள்ளார். காதல் மன்னன், காதலா காதலா உள்ளிட்ட் படங்கள் அவற்றில் சில.

இவர் சர்வர் சுந்தரம் திரைபடத்திற்கு பத்தே நிமிடத்தில் இசையமைத்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க அதை பற்றி பார்க்கலாம். 

"சர்வர் சுந்தரம்" என்பது 1964 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழித் திரைப்படமாகும், இது கே. பாலசந்தர் எழுதியது மற்றும் திரைப்பட நட்சத்திரமாக வேண்டும் என்று கனவு காணும் டைட்டில் சர்வராக நாகேஷ் நடித்தார்.

இந்த படத்திற்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி தான். அந்த கம்போசிங் தரத்தை ஒரு நேர்காணலில் இசையமைப்பாலை ஷங்கர் கணேஷ் ஷேர் செய்துள்ளார். அந்த நேர்காணலில் பேசுகையில், "ஏ வி எம் ஸ்டுடியோவில் அனைவரும் வந்த பிறகு உடனடியாக ஒரு பாட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அப்போது கவிஞர் உடனே எழுதி கொடுத்து விட்டார் வரிகளை. 

அதை விஸ்வநாதன் கையில் வாங்கி கொண்டு, அவளுக்கென.... என்று மெட்டு கட்டி பாட தொடங்கிவிட்டார். இதற்க்கு ஒரு 10 நிமிடம் கூட ஆகவில்லை. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், ஒரு சில நேரங்களில் இப்படி சுலபமாக பாட்டு ஓகே ஆகிவிடும். அனால் சில நேரங்களில்  பல நாட்கள் அனால் கூட சரியான டியூன் அமையாது." என்று கூறினார். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: