Ma Ka Pa Anand Tamil News: சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முதன்மையான சேனலாக விஜய் டிவி வலம் வருகிறது. இந்த சேனலில் தற்போது பிக்பாஸ், நீயா நானா – 7, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை – சீசன் 3, 5 ஸ்டார் கிச்சன் சீசன் 2, சூப்பர் டாடி என பல ரியாலிட்டி ஷோக்கள் வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளததோடு தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாகியுள்ளது. இதனால், விஜய் டிவி தொடர்ந்து பல புதிய ஷோக்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இந்த இந்த வாரம் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒரு புதிய கேம் ஷோவை ஒளிபரப்பி ரசிகர்களை குஷிப்படுத்த முடிவு செய்துள்ளது.

அந்த ஷோவிற்கு ‘சவுண்ட் பார்ட்டி’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார். ஷோவில் போட்டியாளர்கள் இரு அணியாக பிரிக்கப்பட உள்ளனர் (ஆண்கள் – பெண்கள்). மதுரை முத்து ஆண்கள் அணியையும், பாடகி கிரேஸ் கருணாஸ் பெண்கள் அணியையும் வழிநடத்த உள்ளனர்.

தற்போது இந்த ஷோவுக்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன. இதில், மாகாபா ஆனந்த்தின் விஜய் டீவியுடனான 10 ஆண்டு பயணத்தை போட்டியாளர்கள் கொண்டாடுகிறார்கள். மாகாபா -வின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பயணம் குறித்த குறும்படமும் அதில் ஒளிபரப்படுகிறது.

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையை தொடங்கிய மாகாபா ஆனந்த் விஜய் டிவியில் 10 ஆண்டுகளாக தொகுப்பாளராக இருக்கிறார். அந்த சேனலில் முன்னணி தொகுப்பாளராகவும், சில ஷோக்களின் முகமாகவும் அவர் இருக்கிறார் என்றால் நிச்சயம் மிகையாகாது. அவருடன் ஷோவை தொகுபவர்களுக்கு உரிய இடத்தை வழங்குபவராகவும், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் முதல் பார்ப்பவர்கள் வரை அனைவரும் மகிழ்விக்க கூடிய ஒருவராகவும் மாகாபா ஆனந்த் இருக்கிறார்.

இந்நிலையில், அவருக்கு ‘சவுண்ட் பார்ட்டி’ ஷோ மூலமாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது விஜய் டிவி. மேலும் ஒரு பெரிய சர்ப்ரைசாக மகாபாவின் மனைவி சூசனை வரவழைத்து அவருக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளனர்.

இதில், ‘மாகாபா பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை சொல்லுங்க’ என தொகுப்பாளர் தீபக் கேட்க, அதற்கு சூசன் சற்றும் யோசிக்காமல் ‘தப்பே செய்யவில்லை என்றாலும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க முந்திக் கொள்வார்’ என்று கூறுகிறார். மேலும் இது போன்ற நிறைய சுவாரஷ்யமான தகவல்களை சூசன் அந்த ஷோவில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“