Advertisment
Presenting Partner
Desktop GIF

அடிப்பாரு… கன்னா பின்னான்னு கத்துவாரு..! மாரி செல்வராஜ் பற்றி உதயநிதி ஷாக்

மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடித்து வேலை வாங்குவார் என்று போட்டு உடைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Vadivelu was open about singing a song in AR Rahman's music

மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

இப்பபடம் வருகிற ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த கமல்ஹாசன் முன்னிலையில் பேசிய மாரி செல்வராஜ், கமலின் தேவர்மகன் படம் பார்த்த நாளில் தனக்குள் உருவானது தான் மாமன்னன் என்றும், தேவர்மகன் தனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தி படம். படத்தில் வரும் இசக்கி தான் மாமன்னன் என்றும் கூறியிருந்தார்.

மாரி செல்வராஜின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பை ரசிகர்கள் பதிவு செய்தனர். சாதியே வேண்டாம் என கருத்து சொன்ன படத்தை சாதிய பெருமை பேசிய படமாக மாரி செல்வராஜ் சித்தரிக்கிறார் என்றும் அவரை கடுமையாக சாடினர்.

மாரி செல்வராஜ் பற்றி உதயநிதி ஷாக்

இந்நிலையில், மாமன்னன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றிய பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஷூட்டிங் ஸ்பாட்டில் மாரி செல்வராஜ் தான் ரொம்ப டென்ஷனாக இருப்பார் என்றும், அவருடைய அசிஸ்டண்ட் டைரக்டர்கள் எல்லாரையும் போட்டு அடிப்பாரு. கண்ணாபின்னானு கத்துவாரு, ஒரே போர்க்களம் மாதிரி இருக்கும் என கூற, அதற்கு வடிவேலுவும் ஆமாம் என சொன்னார்.

இதேபோல், மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு நேர்காணலில், 'என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன்' என்று அவரே கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியது ஒருபுறம் தீயாக பரவ, மறுபுறம் அவர் 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகனின் அப்பாவாக வரும் கூத்து கட்டும் கலைஞரை கன்னத்தில் அறைந்ததாக அவரே கூறும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிர்களும் மாரி செல்வராஜ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Udhayanidhi Stalin Tamil Cinema Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment