ஃபகத் பாசில்- வடிவேலு ஜோடியின் மற்றும் ஒரு கெத்து: மாரீசன் இப்போது ஓ.டி.டி தளத்தில் ஹிட்!

ஒரு மறதி நோயாளிக்கும், ஒரு திருடனுக்கும் இடையிலான பயணம்தான் மாரீசன் படத்தின் மையக்கதை. வேலாயுதம் என்ற மறதி நோயாளி கதாபாத்திரத்தில் வடிவேலுவும், தயா என்ற திருடன் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசிலும் நடித்துள்ளனர்.

ஒரு மறதி நோயாளிக்கும், ஒரு திருடனுக்கும் இடையிலான பயணம்தான் மாரீசன் படத்தின் மையக்கதை. வேலாயுதம் என்ற மறதி நோயாளி கதாபாத்திரத்தில் வடிவேலுவும், தயா என்ற திருடன் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசிலும் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
maareesan

ஃபகத் பாசில்- வடிவேலு ஜோடியின் மற்றும் ஒரு கெத்து: மாரீசன் இப்போது ஓ.டி.டி தளத்தில் ஹிட்!

சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வடிவேலு-ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியான மாரீசன் திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம், கடந்த ஜூலை 25 அன்று வெளியானது. படம் குறித்து அதிகம் பேசப்படாததற்கு, குறைவான விளம்பரமும், அதே நாளில் வெளியான விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ படத்திற்கு அதிக விளம்பரம் செய்யப்பட்டதுமே காரணம் என்று கூறப்படுகிறது.

கதைக்கரு:

Advertisment

மறதி நோயாளிக்கும், திருடனுக்கும் இடையிலான பயணம்தான் படத்தின் மையக்கதை. வேலாயுதம் என்ற மறதி நோயாளி கதாபாத்திரத்தில் வடிவேலுவும், தயா என்ற திருடன் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசிலும் நடித்துள்ளனர். தயா, வேலாயுதத்திடமிருந்து பணத்தைத் திருட நினைத்து அவனுடன் பயணிக்கிறான். ஆனால், அந்தப் பயணம் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது.

நடிப்பு:

மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டிய ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் துறுதுறுவென இருக்கும் திருடனாக தனது நடிப்பில் வித்தியாசம் காட்டியுள்ளார். நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்தைக் கடந்து, குணச்சித்திர கதாபாத்திரங்களில் முழுமையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள வடிவேலுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இந்த இருவரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணிதான் படத்திற்குப் பெரிய பலம்.

படத்தின் சிறப்பம்சங்கள்:

மாரீசன் ஒரு பான்-இந்தியா படமாக விளம்பரம் செய்யப்படாமல், சமூகத்தில் நடக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல திரைக்கதை, கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்கள் என இந்தப் படம் வித்தியாசமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. படத்தில், பூனையிடமிருந்து தப்பிக்கும் எலி, பாம்பிடம் சிக்கும் காட்சி ஒரு குறியீடாகக் காண்பிக்கப்பட்டு உள்ளது. கிளைமாக்ஸில், வடிவேலு நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது, காவலர் கோவை சரளா கூறும் வசனம் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. இப்போது, ‘மாரீசன்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

Vadivelu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: