Maari 2 First Look : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை சாய் பல்லவி இணைந்து நடிக்கும் மாரி 2 படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் உட்பட பலரும் நடித்திருந்த மாரி படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை என்றாலும், இப்படத்தில் வரும் வசனங்கள் இன்றும் போர் அடிக்காமல் இருக்கிறது.
மார்கெட் தாதாவாக வளம் வரும் தனுஷ், தனது சேட்டை நடிப்பு, வசனங்கள் மற்றும் கலர் சட்டை, காந்தி கண்ணாடி ஆகியவற்றைக் கொண்டு குழந்தைகள் வெகுவாக கவர்ந்தார். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அன்று பேசத் தொடங்கிய ‘செஞ்சிருவேன்’ வசனம் இன்றும் ஓயவில்லை.
Maari 2 First Look : மாரி 2 போஸ்டர் ரிலீஸ்
இத்தகைய ஒரு ஹிட் அடித்த படத்தின் இரண்டாம் பாடம் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படத்தின் ஷூட்டிங் தொடக்கத்திற்கு முன்னர், மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
November 2018
இந்த போஸ்டரில், தனுஷ் ஒரு பட்டாசைப் பற்றவைத்து தூக்கி எரிவது மட்டுமே புதிதாக உள்ளதே தவிர, அவரின் தோற்றம் எவ்வித மாற்றமும் இல்லாமலேயே உள்ளது. தனுஷ் ரசிகர்கள் அனைவரும் இந்த போஸ்டர் ரிலீஸை ‘வேற லெவல், மாஸ், கொடி பறக்குதா’ என்றெல்லாம் பகிர்ந்து வந்தாலும், பொதுமக்கள் பார்வையில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
வண்டபார் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.