Maari 2 Full Movie Leaked in Tamilrockers: மாரி 2 படத்தை இணையத்தில் சுடச்சுட தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டத்தை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இளம் ரசிகர்கள் முட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். தனுஷ் ரசிகர்கள் ஆவேசத்தில் உள்ளனர். தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களின் உள் அரசியலால் அமளிப் பட்டுக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தமிழ் ராக்கர்ஸின் இந்த அநியாயத்தை கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்கிற குரல்கள் தமிழ் சினிமா உலகில் எழுந்திருக்கிறது.
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் தயாரான மாரி 2 படம் இன்று (டிசம்பர் 21) வெளியானது. இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை கோரி பட தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுமார் 16,000 இணையதளங்களுக்கு மாரி 2 படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
Maari 2: Tamilrockers Leaked Maari 2 Full Movie Online for Free Download- விஷாலும், தயாரிப்பாளர் சங்கத்தினரும் என்ன செய்யப் போகிறார்கள்?
Maari 2 Full Movie In Tamilrockers: கொஞ்சம் கவனியுங்க விஷால்
பொதுவாகவே இப்படி நீதிமன்றம் சென்று தடை பெறுகிற படங்களை சற்றே ஆவேசத்துடன் முன்கூட்டியே ரிலீஸ் செய்யும் வழக்கத்தையும் தமிழ் ராக்கர்ஸ் செய்து வருகிறது. அந்த வகையில் மாரி 2 படத்தையும் ரிலீஸான சிலமணி நேரங்களில் வெளியிட்டு திரையுலகை அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்!
மாரி 2 ஆன் லைனில் வெளியானதைத் தொடர்ந்து இளம் ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸ் முகவரியைத் தேடி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அலை மோதினர். பொதுவாகவே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதள முகவரியை அவ்வப்போது மாற்றிவிடுவது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்து தப்பவே இந்த நழுவல்!
எனினும் சளைக்காத பலர், தமிழ் ராக்கர்ஸ் முகவரியை சல்லடை போட்டு அலசினர். மாரி 2 படத்தை வெற்றிப் படமாக்க விரும்பும் தனுஷ் ரசிகர்கள் இதில் அதிர்ச்சி ஆனார்கள். தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக அவர்களில் பலர் ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
Read More: Maari 2 in Tamilrockers: மாரி 2 -ஐ சுடச்சுட ஆன் லைனில் பந்தி வைத்த தமிழ் ராக்கர்ஸ்
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம்தான் தமிழ் ராக்கர்ஸின் அட்டகாசத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். ஆனால் வீடு பற்றி எரிகிற நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தினர் தங்களின் இருக்கையை காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
மாரி 2, கனா, சீதக்காதி என பெரும் கனவுகளுடன் வெளியான படங்கள் அநியாயமாக திருடப்பட்ட அதே வேளையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் யாருக்கு? என்பதுதான் சங்க வட்டாரத்தில் பெரிய பஞ்சாயத்தாக ஓடியது. ஒருவழியாக நீதிமன்றம், விஷால் தரப்பு சங்கத்தை நடத்த வசதியாக பூட்டை திறக்க உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படியுங்கள்... மாரி 2 விமர்சனம்: ரசிகர்களுக்கு செம்ம! மற்றவர்களுக்கு?
தினம் தினம் சினிமா கருவூலத்தை கள்ளச்சாவி போட்டு திருடும் தமிழ் ராக்கர்ஸின் அடாவடியை ஒழிக்க விஷாலும், தயாரிப்பாளர் சங்கத்தினரும் என்ன செய்யப் போகிறார்கள்? தங்கள் உள் அரசியலில் காட்டும் ஆர்வத்தையும் வேகத்தையும் பைரசி வெப்சைட்களை ஒழிப்பதிலும் கொஞ்சமாவது காட்ட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் திரை உலகத்தினர்.