நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடல் பாடியுள்ளார். இப்பாடல் மாலை 6 மணிக்கு வெளியானது.
Advertisment
தனுஷ் தற்போது இயக்குநர் பாலாஜி மோகனின் மாரி 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் சாய் பல்லவி, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
மாரி 2 படத்தின் மாரி’ஸ் ஆனந்தி பாடல் ரிலீஸ்
சில நாட்களுக்கு முன்பு மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “ரவுடி பேபி” பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தனுஷ் எழுதியிருந்த இந்தப் பாடலை அவரும், பாடகி தீ யும் பாடியுள்ளனர். அதோடு “மாரி கெத்து” என்ற பாடலும் ரிலீஸாகி இருக்கிறது. இதனை யுவனுடன் இணைந்து தனுஷ் மற்றும் சின்னப் பொண்ணு இருவரும் பாடியிருக்கிறார்கள்.
Advertisment
Advertisements
தனுஷ் பாடல் பாடிய இசைஞானி இளையராஜா
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு, “மாரி'ஸ் ஆனந்தி” என்ற பாடல் வெளியாகும் என தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனை இசைஞானி இளையராஜா பாடியிருக்கிறார். தற்போது இந்தப் பாடலின் ஸ்னீக் பீக் வெளியாகியிருக்கிறது. மிகுந்த நாட்களுக்குப் பிறகு யுவனின் இசையில் இளையராஜா பாடியிருக்கும் அந்த பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் இப்போது இப்பாடல் வெளியானதை தொடர்ந்து, பலரும் கேட்டு ரசித்து வருகின்றனர்.