Maari 2 Movie Total Collection: நடிகர் தனுஷ், சாய் பல்லவி நடித்து சமீபத்தில் வெளியான மாரி 2படத்தின் வசூல் விவரங்களை இங்கு காணலாம்.
பொதுவாக பெரிய நடிகர்களின் படம் விடுமுறை தினத்தில் வெளியானால் தான் வசூலை அள்ளும். அதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலர் விதிவிலக்கு! அண்மைக்காலமாக நடிகர் தனுஷின் படமும் எப்போது வந்தாலும் ஒரே மாதிரியான ஓப்பனிங்கை கொடுக்கிறது.
Maari 2 Movie Box Office Collection: மாரி 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்
இதற்கு முன்பு மாரி முதல் பாகமும் ஜூன் மாதம் தான் வந்தது. ஜூன் மாதம் பள்ளி திறந்தவுடன் வருவதால் தியேட்டர் ஆடியன்ஸ் குறையவே வாய்ப்பு. ஆனால் மாரி முதல் பாகத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் விமர்சனங்கள் ஊடகங்களில் எதிர்மறையாக வந்தாலும் மாரி முதல்பாகம் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் திருப்தியை ஏற்படுத்தியது. இது வடசென்னை படத்தின் வசூலிலும் தொடர்ந்தது.
புதுப்பேட்டை, மாரி, கொடி, வடசென்னை போன்ற படங்கள் வசூல் ரீதியாக திருப்தியளித்திருப்பதால் மிக குறுகியகால தயாரிப்பாக தாதா கதாபாத்திரத்தில் தனுஷ் மாரி 2 எடுத்தார். இந்த படமும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை எனினும் வசூல் ரீதியாக நல்ல நிலையில் இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் சொல்கின்றது. அதாவது சென்னையில் இப்படம் முதல் நாள் 58 லட்சம் வசூலித்தது தனுஷின் கேரியரில் மிகசிறப்பாக பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து வார இறுதிவரை அதாவது மூன்று நாட்களில் 1.78 கோடியை வசூலித்துள்ளதாகவும், கோவை, மதுரை, சேலம் ஏரியாக்களில் மொத்தம் 4.9 கோடியையும், செங்கல்பட்டு ஏரியாவில் 1.1கோடியையும், வட ஆற்காடு, தென் ஆற்காடு, கடலூர், பாண்டிச்சேரியில் மொத்தம் 7.8 கோடியையும் வசூலித்துள்ளது.
ராமநாதபுரம், சிவகங்கை ஏரியாவில் 96 லட்சத்தையும், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் 3கோடிவரையும், டி.கே எனப்படும் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாக்களில் 5 முதல் 6 கோடிக்கு நெருக்கமாக வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களில் 2 கோடி என வசூலித்துள்ள மாரி 2, ஓவர்சீஸ் ஏரியாக்களில் மூன்று நாட்களில் 4.9 கோடியை வசூலித்துள்ளது.
முதல் மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 26 கோடி வரையிலும், இந்தியா முழுவதும் 28 கோடிவரையும், உலகம் முழுவதும் சுமார் 33 கோடி வசூலித்து மிகப்பெரிய வசூல் பட்டியலில் தனுஷ் இணையும்படி செய்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் விடுமுறை நாட்களில் வசூல் கூடும் என்பதால் மாரி 2 வசூல்மழைதான்.
திராவிட ஜீவா