Maari 2 official Trailer : வண்டர்பார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் மாரி 2 டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு ரிலீஸ் ஆனது.
தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் விமர்சன ரீதியாக பல குறை இருந்தாலும், வசூல் நன்றாகவே இருந்தது. இதை தொடர்ந்து அதே படத்தின் பாகம் இரண்டு தயாரிக்கும் முடிவில் அதிரடியாக இறங்கினார் தனுஷ்.முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருக்க, இரண்டாவது பாகத்தில் களமிறங்கியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
Maari 2 official Trailer : மாரி 2 டிரெய்லர் ரிலீஸ்
இந்நிலையில் மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகிவிட்டது. இப்படத்தின் ரிலிஸ் தேதியை தற்போது தனுஷ் அறிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
#Maari2 trailer Tom morning at 11 am .. #tharalocal #senjuruven #december21release pic.twitter.com/mO2AeRFaCs
— Dhanush (@dhanushkraja) 4 December 2018
இதனை தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு மாரி 2 டிரெய்லர் ரிலீஸ் ஆனது. மாரி 2 டிரெய்லருக்காக தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். முதல் பாகத்தில், ஃபேமஸான டயலாக் “செஞ்சிருவேன்”. இரண்டாம் பாகத்திலும் இருக்கிறது. மாரி 2 டிரெய்லரை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.