Maari 2 Press Meet: மாரி 3 படம் வருகிறதா? தனுஷ் என்ன சொல்கிறார்?

Maari 2 press meet : மாரி 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் மாரி 3 பற்றிய குறிப்பை சொன்ன தனுஷ்

Maari 2 press meet
Maari 2 press meet

Maari 2 press meet : தனுஷ் நடிப்பில் வரும் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கும் மாரி 2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உட்பட பலரும் நடித்துள்ள படம் மாரி 2. இந்த படம் டிசம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராக உள்ளது.

இதற்கான டிக்கெட் பதிவுகள் ஒரு சில தியேட்டர்களில் நேற்று முதல் தொடங்கியது. 21ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் மாரி 2 படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

Maari 2 press meet : மாரி 2 செய்தியாளர்கள் சந்திப்பு

விழாவில் பேசிய பிரபலங்கள் அனைவரும் மாரி 2 படத்தின் நடித்த அவரவர்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

நடிகர் தனுஷ்: 

மாரி 2 முழுக்க முழுக்க மசாலா படம். மாஸ் சீன்ஸ் இருக்கு… நட்பு பற்றிய முக்கிய சீன்ஸ் இருக்கு. தரமான கமெர்ஷியல் படத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். மாரியாக இருப்பது சாதாரண விஷயமல்ல. மாரி நல்லவனும் இல்லை கெட்டவனும் இல்லை ஆனாலும் மக்களுக்கு மாரியை பிடிக்க வேண்டும். இந்த கதாப்பாத்திரத்திற்காக நிறைய ஹோம்வொர்க் செய்திருக்கிறேன். நிச்சயம் உங்களை திருப்பிப்படுத்தும்.

நான் சினிமாவிற்குள் வந்தபோதே யுவன் பிரபலமானவர். அப்போதே நான் அவருடைய தீவிர ரசிகர், இப்போதும் ரசிகர். அவர் இசையமைப்பில் தான் துள்ளுவதோ இளமை ஹிட் ஆனது. அந்த படம் இல்லையென்றால் இப்போது நான் இங்கு இல்லை. மாரி படத்தை எனக்கு கொடுத்த பாலாஜி மோகனுக்கு நன்றி. மாரி 2 ஹிட் ஆனால் மாரி 3 படம் எடுப்பதை பற்றி முடிவு செய்வோம்.

நடிகை சாய் பல்லவி:

இந்த படத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த பாலாஜி மோகனுக்கு நன்றி. தனுஷ் சார் நடிக்கும்போது அவரை விட்டு கண்கள் வேறு எங்கும் நகராது. மாரி 2 செட்டில் ஆட்டோ ஓட்டியது சுவாரசியமாக இருந்தது.

நடிகை வரலட்சுமி:

2018ம் ஆண்டு எனக்கு அருமையான ஆண்டு. நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். சாய் பல்லவியுடன் இணைந்து சின்ஸ் இல்லை ஆனால் தனுஷுடன் இணைந்து சீன்ஸ் இருக்கு. இந்த படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Maari 2 press meet

Next Story
Petta unseen poster : நீங்கள் இதுவரை பார்த்திராத பேட்ட போஸ்டர் ரிலீஸ்Petta unseen poster
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com