Video : ரவுடி பேபி பாடல் மட்டுமல்ல மேக்கிங் வீடியோவும் சாதனை படைக்கிறது

Maari 2 movie Rowdy Baby Making Video released : ரவுடி பேபி பாடல் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

By: Updated: March 2, 2019, 03:23:35 PM

Rowdy Baby Making Video released : மாரி 2 படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடனமாடியிருக்கும் ரவுடி பேபி பாடல் மேக்கிங் வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம் மாரி 2. இப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதே படத்தின் 2ம் பாகத்தை படைக்கும் பணியில் இவர்கள் களமிறங்கினார்கள். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Rowdy Baby Making Video : ரவுடி பேபி மேக்கிங் வீடியோ

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த பாடலை பட்டித்தொட்டியெங்கும் மக்கள் ஆர்வமாக கேட்டு ரசித்தனர். யூடியூப்பில் இந்த பாடலை இதுவரை சுமார் 250 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இத்தகைய சாதனையை படைத்த முதல் தமிழ் பாடல் இது தான்.

இந்த பாடலின் மேகிங் வீடியோவை வண்டர்பார் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இத வீடியோவில் நடிகரும், நடன கலைஞருமான பிரபு தேவா இப்பாடலுக்கு பயிற்சியளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. நேற்று வெளியான இந்த பாடலை இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கூடிய விரைவில் இந்த மேக்கிங் வீடியோவும் பெரிய அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Maari 2 rowdy baby making video released

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X