Maari Gethu second track release : நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் மாரி 2 படத்தின் இரண்டாவது பாடல் மாரி கெத்து இன்று காலை 11 மணிக்கு ரிலீஸானது.
Advertisment
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் தான் மாரி 2. இப்படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இதே படத்தின் 2ம் பாகத்தை படைக்கும் பணியில் இவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
Maari Gethu second track release : மாரி 2 படத்தின் மாரி கெத்து பாடல் ரிலீஸ்
முதல் பாகத்தில் மாரி தர லோகல், டானு டானு டானு பாடல்கள் இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது. இந்நிலையில், மாரி 2 படத்தின் “ரவுடி பேபி” பாடலை தனுஷ் வெளியிட்டார். இந்த பாடல் அனைவரது போன்களிலும் ரிபீட் மோடிலேயே இருந்து வருகிறது.
Advertisment
Advertisements
இதனை தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலையும் இன்று வெளியிட திட்டமிட்டனர். இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இன்று காலை 11 மணிக்கும் மாரி 2 படத்தின் இரண்டாவது பாடல் “மாரி கெத்து” ரிலீஸ் ஆனது. நேற்று மாமனாரின் பேட்ட 2ம் டிராக் ரிலீஸ் என்றால், இன்று மருமகனின் மாரி 2 இரண்டாம் டிராக் ரிலீஸ்.
பேட்ட மரண மாஸ் பாடலை மாரி 2 டிரெய்லர் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது. அதே போட்டி உல்லால்லா - மாரி கெத்து இடையே நடக்கும்.