Advertisment

100 கோடி வசூல், காமெடி ரோலர் கோஸ்டர்… 'மாவீரன்' படம் எப்படி இருக்கு? - ட்விட்டர் ரியாக்சன்!

ரசிகர் ஒருவர் நடனம், யோகி பாபு-வின் காமெடி, சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரம் மற்றும் பரிமாணம் ஆகியவை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Maaveeran  Sivakarthikeyan twitter review in tamil

'மாவீரன்' படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ரியாக்சன்களை இங்கு பார்க்கலாம்.

Maaveeran  Sivakarthikeyan Tamil News: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் 'மாவீரன்'. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை 'மண்டேலா' பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

பரத் சங்கர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மேலே இருந்து ஒரு குரல் கேட்கும். அந்த குரலை விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 'மாவீரன்' படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ரியாக்சன்களை இங்கு பார்க்கலாம்.

நூறு கோடி வசூல் கன்ஃபார்ம்

மாவீரன் முதல் பாதி சூப்பர் என்றும் 2ம் பாதி டீசென்ட்டாக உள்ளது என்றும் படம் கண்டிப்பாக டாக்டர், டான் படங்களை போல 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்றும் ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

காமெடி ரோலர் கோஸ்டர்

மற்றொரு ரசிகர் தனது ட்விட்டர் பதிவில், மாவீரன் முதல் பாதி சூப்பர், 2ம் பாதியில் சில லேக் இருப்பதாகவும், திரும்ப திரும்ப ரிப்பீட் காட்சிகள் வந்து கடுப்பேற்றுவதாக கூறியுள்ளார். மேலும் முதல் பாதி முழுக்க சிவகார்த்திகேயன், யோகி பாபுவின் காமெடி ரோலர் கோஸ்டர் கலக்கல் என்றும் இடைவேளை காட்சி செம சூப்பர் என்றும் பாராட்டியிருக்கிறார்.

3 விஷயம் சூப்பர்

இன்னொரு ரசிகர் நடனம், யோகி பாபு-வின் காமெடி, சிவகார்த்திகேயனின் கதாப்பாத்திரம் மற்றும் பரிமாணம் ஆகியவை சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Cinema Entertainment News Tamil Tamil Movie Review Siva Karthikeyan Twitter Response
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment