கண்களில் நெருப்பு, என்‌ அமைதியை அசைக்க முடியாது; மாதம்பட்டி ரங்கராஜ் இன்ஸ்டா பதிவு வைரல்!

நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சில வாரங்களாகவே டாக் ஆஃப் தி சிட்டியாக உள்ளார். அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கூட பேச்சு பொருளாகிவிட்டது.

நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த சில வாரங்களாகவே டாக் ஆஃப் தி சிட்டியாக உள்ளார். அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கூட பேச்சு பொருளாகிவிட்டது.

author-image
WebDesk
New Update
madhampatty rangaraj

மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞராக பிரபலமாகுமுன், நடிகராக மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் நடித்ததில் மக்களிடையே பாராட்டைப் பெற்றவர். இணையம் வளர்ச்சி பெற்றபின் தான் அவர் ஒரு திறமைமிக்க சமையல் கலைஞர் என்பதும் பலருக்கும் தெரிந்தது.

Advertisment

சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் உயர்தர பணக்காரர்களின் வீட்டு விழாக்களில் அவரது சமையல் முக்கிய பங்கு வகித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரு சீசன்களில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். 

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். ஸ்ருதிக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது கடந்த சில மாதங்களாகவே மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த கிசுகிசுக்கள் தொடர்ந்து இருந்து வந்தது.

Advertisment
Advertisements

அதற்கு ஏற்ற வகையில் கடந்த வாரத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜோய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ். இது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இணையவாசிகளுக்கு ஷாக் கொடுத்தது.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளாரே என்று எல்லாம் பலரும் கேள்வி எழுப்பினார்கள். முதல் மனைவி ஸ்ருதி புகார் அளித்தால் மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஜெயில் தான் என்றும் பலரும் கூறி வந்தார்கள்.

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமான நிலையத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு அவர் இட்டுள்ள கேப்ஷன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " கனவுகளால் நிரம்பிய பைகள், நெருப்பைக் கக்கும் கண்கள், சீர்குலைக்க முடியாத அமைதி. நம்ம மனநிலையை தடுக்க முடியாத போது பெரிய வேகத்தடைகள் கூட சிறிய அறிக்கைகள் போலத்தான் இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

தைரியமாக கேப்ஷனிட்ட மாதப்பட்டி ரங்கராஜ், எதற்கு பயந்து கமெண்ட் செக்‌ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார் என்று தெரியவில்லையே என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: