ஜாய் கிறிஸில்டா போட்ட ஹேஸ்டேக்... 15 நாளில் ரூ.12.5 கோடி நஷ்டம்; ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வாதம்

சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜை மணந்ததாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்களால், ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனமான 'மாதம்பட்டி பக்ஷ்சாலா'விற்கு கடந்த 15 நாட்களில் ரூ.12 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜை மணந்ததாகக் கூறி, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துக்களால், ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனமான 'மாதம்பட்டி பக்ஷ்சாலா'விற்கு கடந்த 15 நாட்களில் ரூ.12 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
madhampatty rangaraj

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட கருத்துகள் காரணமாக, மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடந்த 15 நாட்களில் ரூ. 12 கோடி மதிப்பிலான வணிகத்தை இழந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Advertisment

இந்நிறுவனத்தின் இயக்குநர் மாதம்பட்டி ரங்கராஜ்ஜை திருமணம் செய்ததாகக் கூறிவரும் ஜாய் கிறிஸில்டா, தங்கள் நிறுவனத்தின் வர்த்தக முத்திரையான ‘மாதம்பட்டி பக்ஷ்சாலா’விற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டு வருவதாக நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பதிவுகளில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகள், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது நேரடியாக கிறிஸில்டாவின் அவதூறு பதிவுகளுக்கு இட்டுச் செல்வதாக நிறுவனத்தின் வழக்கறிஞர் பி.எஸ். ராமன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதே சமயம், ஜாய் கிறிஸில்டாவின் வழக்கறிஞர் எஸ். பிரபாகரன், நிறுவனத்தின் இந்தக் கூற்றை மறுத்தார். ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டதாக வாய்மொழியாக கூறுவதோடு நிறுத்திவிடாமல், அதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஜாய் கிறிஸில்டாவின் கருத்துரிமையை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் வாதிட்டார். “திருமணத்திற்குப் பிறகு ஏமாற்றப்பட்டு, தற்போது கர்ப்பமாக இருக்கும் என் வாடிக்கையாளரின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது” என பிரபாகரன் தனது வாதத்தை முன்வைத்தார்.

ஜாய் கிறிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த உடனேயே, நிறுவனம் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக பிரபாகரன் சுட்டிக்காட்டினார். இது மாதம்பட்டி ரங்கராஜைப் பாதுகாப்பதற்காகவே தொடுக்கப்பட்ட வழக்கு எனவும் அவர் குற்றம் சாட்டினார். நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 24-க்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம், ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரும் நிறுவனத்தின் மனு மீது விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment
Advertisements

மேலும், தனிப்பட்ட முறையில் ரங்கராஜ் தாக்கல் செய்துள்ள வழக்கையும், நிறுவனத்தின் வழக்கோடு சேர்த்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆடை வடிவமைப்பாளரின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நிறுவனத்தின் கோரிக்கை அடுத்த விசாரணை தேதியில் பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.

Madhampatty Rangaraj

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: