மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிஸில்டா: 'பாக்கசாலா' பெயரை பயன்படுத்த தடைகோரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களைத் தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடைவிதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களைத் தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடைவிதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
madhampatty-joy-crizildaa

மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிஸில்டா: 'பாக்கசாலா' பெயரைப் பயன்படுத்தத் தடைகோரி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தனக்கு எதிராக எந்தவித ஊடகத்திலும் அவதூறு மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட தடை விதிக்கக் கோரி பிரபல சமையல் கலை நிபுணரும், நடிகருமான 'மாடம்பட்டி' ரங்கராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கைகள் அவரது ஆளுமை உரிமைகளை இழிவுபடுத்துவதாக ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதன்கிழமை (செப்.24) நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ரங்கராஜ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனம் ஏற்கெனவே தாக்கல் செய்த வழக்கைத் தவிர, அவரது தனிப்பட்ட முறையில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த புதிய வழக்கு எண்ணிடப்பட்டு, இன்னும் விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் மூலம் ரங்கராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறும் ஜாய் கிரிஸில்டா, தனக்கு எதிராக அவதூறான கருத்துகளை உருவாக்குவது, எழுதுவது, அச்சிடுவது, வெளியிடுவது, ஒளிபரப்புவது, விநியோகிப்பது, பதிவிடுவது, சுற்றறிக்கையிடுவது அல்லது பரப்புவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கக் கோரியுள்ளார்.

ரங்கராஜின் குணம், தனிப்பட்ட வாழ்க்கை, விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் அவரது தொழில் நிலை மற்றும் நற்பெயரைக் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இழிவுபடுத்தும் வகையிலான காணொளிகள், ரீல்கள், புகைப்படங்கள், தலைப்புகள் அல்லது பிற ஆடியோ காட்சி உள்ளடக்கங்களைப் பதிவிட கிரிஸில்டாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisment
Advertisements

ரங்கராஜின் பிரதான வழக்கோடு இடைக்கால மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 26, ஜூலை 30, ஆகஸ்ட் 19 மற்றும் ஆகஸ்ட் 30, 2025 ஆகிய தேதிகளில் பதிவிட்ட அவதூறு கருத்துகளை நீக்க/அகற்ற வேண்டும் என்றும், அவரது அனைத்து சமூக ஊடகப் பதிவுகளிலிருந்தும் ரங்கராஜின் பெயர், அக்கவுண்ட் ஹேஸ்டேக் நீக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரியுள்ளார்.

இதே சமயம், மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனு ஒன்று மீதான உத்தரவை நீதிபதி செந்தில்குமார் புதன்கிழமை ஒத்திவைத்தார். பதிவு செய்யப்படாத வர்த்தக முத்திரையான ‘மாதம்பட்டி பாகசாலா’வின் நற்பெயரை குறைத்து மதிப்பிடுவதில் இருந்து கிரிஸில்டாவை தடுக்கக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால் ஆக.3ம் தேதி முதல் செப். வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது.

நிறுவனத்தின் ஒரு இயக்குனரின் தனிப்பட்ட விவகாரத்துக்காக நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில் கம்பெனி பற்றி தேடினால், மெனு கார்டுக்கு பதில், கிரிசில்டாவின் வீடியோ தான் வருகிறது . எனவே, எங்கள் நிறுவனம் தொடர்பான சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர். கிரிசில்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை.வர்த்தக நடவடிக்கை குறித்து எதையும் பதிவிடவில்லை.

ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர். எப்போது ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என்று எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. திருமணம் செய்து ஏமாற்றியது குறித்து மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக போலீசில் புகார் அளித்த 3 நாட்களில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன் மூலம் குற்ற வழக்குக்கு வர்த்தக வண்ணம் கொடுக்க முயற்சிக்கின்றனர் என்று வாதிட்டார். அப்போது, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, ரங்கராஜ் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: