Advertisment

மாதம்பட்டி ரங்கராஜ் வாழ்க்கையை மாற்றிய நெப்போலியன் ஆட்டோகிராஃப்; மனம் திறந்த ரங்கராஜ்!

மாதம்பட்டி ரங்கராஜ், தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியம் வரக் காரணம் நடிகர் நெப்போலியன் போட்ட ஒரு ஆட்டோகிராப் தான் என்று தனது சிறுவயது நினைவுகளை மனம் திறந்து பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Rangaraj Napoleon

மாதம்பட்டி ரங்கராஜ் - நடிகர் நெப்போலியன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவின், தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞர், நடிகர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவர் என பிரபலமாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியம் வரக் காரணம் நடிகர் நெப்போலியன் போட்ட ஒரு ஆட்டோகிராப் தான் என்று தனது சிறுவயது நினைவுகளை மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisment

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபலமான சமையல் கலைஞர், உலகம் முழுவதும் சமையல் கலைஞராக வலம் வருபவர், நடிகர் என இளைஞர்கள் மத்தியில் விருப்பமான பிரபலமாக இருக்கிறார்.  மாதம்பட்டி ரங்கராஜ், தன்னுடைய சிறுவயது வாழ்க்கை, குடும்பப் பின்னணி,  வாழ்க்கையில் முன்னுக்கு வந்து சிறுவயதில் கிடைக்காத விஷயங்களை இப்போது அனுபவிப்பது, வாழ்க்கையை மாற்றிய நடிகர் நெப்போலியன் போட்ட ஆட்டோகிராஃப் ஆகியவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது: ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு ஸ்கூலுக்கு போகும் போது யூனிபார்ம் போட்டுட்டு போவதற்கு கூட சரியான வசதிகள் கிடையாது. சில நேரங்களில் யூனிபார்ம் எடுத்து வைத்து தராததால் ஸ்கூலில் முட்டி போட்டு நின்றிருக்கிறேன். அதனாலேயே எனக்கு அதிகமாக உடைகள் மீது ஆர்வம் இருக்கிறது. புதியது புதியதாக பலவிதமான உடைகளை போட்டு பார்க்க நான் ஆசைப்படுகிறேன். சின்ன வயசில் எனக்கு கிடைக்காத பல விஷயங்களை இப்போது நான் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், தனக்கு பல விதமான ஷூ போடுவது குறித்து இருக்கும் விருப்பம் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.  பல விதமான ஷூ போடுவது ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

தன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்கள் குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் பேசியுள்ளார், “கார் என்னுடைய முதல் பேவரைட் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் புதியதாக ஒவ்வொரு கார் வாங்கும் போதும் எனக்கு அதிகமான சந்தோஷம் கிடைக்கும். நான் அதிகமாக டிராவல் செய்வதை விரும்புவேன். இரண்டு முறை நான் வாகனம் ஓட்டிக் கொண்டு போகும்போது விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அப்போது எனக்கு பெரிய அளவில் அடிபட்டது கிடையாது. காரில் மட்டும்தான் அடிபட்டு இருந்தது. அதற்கு காரணம் நான் விலை உயர்ந்த கார்களை பயன்படுத்துவது தான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதனாலையே நான் அதிகமான விலை உயர்ந்த கார்களை வாங்குகிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும், தான் வாழ்க்கையில் இவ்வளவு உயரத்திற்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் நடிகர் நெப்போலியன் போட்ட ஆட்டோகிராஃப் என தனது சிறுவயது நினைவுகளைக் கூறியுள்ளார். 

“இன்று நான் இவ்வளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் சின்ன வயதில் என்னுடைய மனதில் ஏற்பட்ட ஒரு ஆசைதான். அதாவது நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை எங்கள் ஸ்கூல் பக்கத்தில் சினிமா சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் நடிகர் நெப்போலியனும், சுகன்யாவும் நடித்துக் கொண்டிருந்தார்கள். சூட்டிங் பார்த்த எல்லோரும் நெப்போலியனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். நானும் அப்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அதில் அன்புடன் நெப்போலியன் என்று கையெழுத்து போட்டு தந்தார்.

அந்த நேரத்தில் நெப்போலியனை சுற்றி எல்லோரும் நின்று கொண்டிருந்ததை பார்க்கும்போது எனக்கு இதே போல நாமும் ஒரு நாள் பெரிய ஆளாக வேண்டும் என்று ஒரு சிந்தனை வந்தது. அந்த ஆசைதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது” என்று மாதம்பட்டி ரங்கராஜ் கூறியிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madhampatty Rangaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment