காதல் திணிப்பு, பழைய பாணி திரைக்கதை; ஆக்ஷன் காட்சிகளில் திணறுகிறாரா எஸ்.கே? மதராஸி விமர்சனம்

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியள்ள மதராஸி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த்தா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியள்ள மதராஸி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த்தா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Madharsasi

தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த வணிகப் பட இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ்,. தர்பார் மற்றும் சிகிந்தர்  ஆகிய இரு தோல்வி படங்களுக்கு பிறகு, அவரது முதல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த பம் மீண்டும் அவரைப் பழைய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், மதராஸி திரைப்படம் சில இடங்களில் வசீகரித்தாலும், ஒரு ஆக்‌ஷன் கதையாகப் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

Advertisment

படத்தின் டிரெய்லர்கள் ஒரு பொதுவான மனிதன், தனது காதலியைக் காப்பாற்ற, துப்பாக்கி கடத்தல் கும்பலுக்கும், அவர்களைப் பிடிக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையில் மாட்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டின. இதுதான் படத்தின் மையக்கரு. ஏ.ஆர்.முருகதாஸின் சிறந்த படங்களைப் போலவே, நாயகனுக்கும் ஒரு தனித்துவமான குணம் உண்டு. இங்கு, அவனது மனதோடு அவன் நடத்தும் விளையாட்டுகள்தான் அது.

மதராஸி படத்தில், முருகதாஸ் தனது முழு பலத்துடன் இயங்கும் சில தருணங்களைக் காண முடிகிறது. குறிப்பாக, நாயகனின் மனநலப் பிரச்சினைகள் கஜினியுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. முருகதாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் படமாக்கியுள்ளார். ஆனால், இங்கு அவரது புத்திசாலித்தனமான ரைட்டிங், ஒரு காதல் கதையைத் திணிக்க முயன்றதில் வீணடிக்கப்பட்டுள்ளது. கஜினிக்குப் பிறகு, அவரது படங்களில் காதல் கதைக்களங்கள் பெரிதாகக் கவரவில்லை. துரதிர்ஷ்டவசமாக, மதராஸியும் அதே பாதையில் பயணிக்கிறது.

இந்த படத்தின் ரைட்டிங் இங்குத் திசைமாறிப் போகிறது. முருகதாஸ் தனது சிறந்த படங்களில், ஆக்‌ஷன், காதல் மற்றும் சுவாரஸ்யம் ஆகியவற்றைப் பிரிக்க முடியாதபடி இணைத்திருப்பார். ஆனால், இங்கு காதல் பகுதி பழைமையானதாகவும், மேம்போக்கானதாகவும் உள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் நடிப்புக்குக் கதைக்களம் உதவவில்லை. அவர்களின் காதல் காட்சிகளில் ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பு இல்லை. அவர்களது காதலை நம்பும்படி முருகதாஸ் நம்மைத் தூண்டினாலும், நடிகர்களின் நடிப்பால் மட்டும் அந்தக் குறைபாட்டை ஈடுசெய்ய முடியவில்லை.

Advertisment
Advertisements

வழக்கமான முருகதாஸ் பாணியில், படம் பல மாறுபட்ட உணர்வுகளைக் கலந்துகட்டி உள்ளது. ரைட்டிங், ஆக்‌ஷன், போலீஸ் விசாரணை மற்றும் அதிகப்படியான காதல் ஆகியவற்றுக்கு இடையே மாறுகிறது. சிவகார்த்திகேயன், பெரிய நடிகர்களுக்காக உருவாக்கப்படும் முருகதாஸின் பாணியில் சற்றுத் தடுமாறுகிறார். இந்த அளவு பெரிய இயக்குநருடன் அவர் இணையும் முதல் படம் இது. படத்தின் முதல் பாதியில், சிவகார்த்திகேயனின் காமெடி பிம்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முருகதாஸ் முயன்றுள்ளார். ஆனால், அதுவும் முழுமையாகச் சோபிக்கவில்லை.

காமெடி காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், பிஜு மேனன் மற்றும் வித்யுத் ஜம்வால் திரையில் தோன்றும்போதெல்லாம், ஆக்‌ஷன் மீது கவனம் திரும்புகிறது. அவர்களது நடிப்பு, குழப்பமான கதையைச் சரியான பாதையில் கொண்டு செல்கிறது. இந்த இருவரின் வலுவான நடிப்பு, சிவகார்த்திகேயனின் பாத்திரத்திற்கு ஒரு நல்ல சமநிலையைக் கொடுக்கிறது. சிவகார்த்திகேயன் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும்போது, படத்தின் பிற்பாதி மிகவும் கணிக்கக்கூடியதாகவும், மெதுவாகவும் நகர்கிறது.

மதராஸி துப்பாக்கி மாஃபியா மற்றும் தொடர்புடைய சமூகப் பிரச்சினைகளைப் பேசுகிறது. ஆனால், முருகதாஸின் பழைய கதைக்களம் இந்தப் பிரச்சினைகளின் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. சுதீப் எலமோனின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு நிஜமான, காட்சி அனுபவத்தைக் கொடுக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை நிகழ்வுகளைச் சீராக நகர்த்தினாலும், ஒரு ஆக்‌ஷன் படத்திற்குத் தேவையான வேகம் இங்கு இல்லை. படத்தின் பிற்பகுதி நீளமாகத் தெரிகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத் ரவிச்சந்தரின் இசை. அவரது பின்னணி இசை, படத்திற்கு உயிரூட்டி, காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது. திரையரங்கில் படத்தைப் பார்க்கும்போது, அனிருத்தின் இசை ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது. சிவகார்த்திகேயன் ஆக்‌ஷன் காட்சிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நம்பகத்தன்மையுடன் இருக்கிறார். இருப்பினும், இதுபோன்ற பாத்திரங்களில் அவருக்கு அனுபவம் இல்லாதது, நீளமான ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளை அவர் சிரமப்பட்டுச் சுமப்பதை வெளிப்படுத்துகிறது.

ருக்மிணி வசந்த் கதாநாயகியாகப் இல்லாமல், அவர் ஒரே மாதிரியான காதல் கதாபாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டு, வில்லனின் விளையாட்டில் ஒரு காயாக மாறுகிறார். அவர் திரையில் பிரகாசமாகத் தோன்றினாலும், அவரது கேரக்டருக்கான ரைட்டிங், அவருக்கு எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. அவர்களது காதல் கதை எந்த சுவாரஸ்யமான திசையிலும் பயணிக்கவில்லை. பிஜு மேனன், தனது கேரக்டரில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

வித்யுத் ஜம்வால் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், கதை அவரது திறமைக்கு ஈடுகொடுக்கவில்லை. அவர் மட்டும் வேறு படத்தில் நடித்துக்கொண்டிருப்பதைப் போலத் தெரிகிறது, ஒட்டுமொத்தமாக, மதராஸி திரைப்படம் அவரது பிரகாசத்திற்கு ஈடுகொடுக்கத் திணறுகிறது.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: