ஆக்சன் முதல் ரொமான்ஸ் வரை... இந்த மாதம் உங்களை குஷிப்படுத்தப் போகும் படங்கள் லிஸ்ட்!

செப்டம்பர் மாதத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள திரைப்படங்கள் எவை, அவை எந்த தேதிகளில் திரைக்கு வருகிறதென்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

செப்டம்பர் மாதத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள திரைப்படங்கள் எவை, அவை எந்த தேதிகளில் திரைக்கு வருகிறதென்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

author-image
WebDesk
New Update
download (2)

2025-ஆம் ஆண்டில், ஆகஸ்ட் மாதம் தான் தமிழ் சினிமாவுக்கான மிகப் பெரிய வர்த்தக வெற்றியை வழங்கிய மாதமாக திரையுலகத்தில் குறிப்பிடப்படுகிறது. காரணம், அந்த மாதத்தில் வெளியான 'கூலி' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம், 2025-ஆம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் அந்த படம் பெற்றுள்ளது.

Advertisment

இந்த வெற்றியின் பின்னணியில், தமிழ் சினிமா உலகம் செப்டம்பர் மாதத்திலும் அந்த வெற்றியைத் தொடரும் நோக்கில் தயாராகி உள்ளது. ஏற்கனவே, இந்த மாத ரிலீஸ் லைன்அப் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு பெரியது.

செப்டம்பரில், தமிழ் திரையுலகத்தின் பிரபலமான முன்னணி நடிகர்கள் சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரின் புதிய படங்கள் வரிசையாக திரைக்கு வரவுள்ளன. ஒவ்வொரு படமும் தனித்துவமான கதை, பிரம்மாண்டமான காட்சிப்பதிவும், ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் வைக்கும் ஸ்டார் پا்வரும் கொண்டவை.

இதனையடுத்து, இந்த செப்டம்பர் மாத ரிலீஸ்களில் உள்ள முக்கிய திரைப்படங்கள் மற்றும் அவை வெளியாகும் தேதிகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். இந்த தொகுப்பில் அதற்கான முழுமையான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisment
Advertisements

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நான்கு முக்கியமான தமிழ் திரைப்படங்கள் வெளியீடுக்கு தயாராகி உள்ளன. அவற்றில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் என்பது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' திரைப்படம். இந்த படத்திற்கு போட்டியாக, வெற்றிமாறன் தயாரித்துள்ள 'பேட் கேர்ள்' என்ற திரைப்படமும் அந்தவாரம் திரைக்கு வர உள்ளது, இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனுஷ்கா ஷெட்டி மற்றும் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'காத்தி' எனும் பிரம்மாண்ட திரைப்படமும் அதே வாரத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விஜய் டிவி புகழ்  பாலா ஹீரோவாக அறிமுகமாகும் 'காந்தி கண்ணாடி' திரைப்படமும் அந்நாள்களில் திரையரங்குகளை எட்டும். இப்படியாக, செப்டம்பர் முதல் வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலவிதமான சுவைகளைத் தரும் வகையில் படங்கள் வரிசையாக ரிலீசாகின்றன.

செப்டம்பர் 12ஆம் தேதி, ஐந்து தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. இதில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' மற்றும் அதர்வா போலீஸாக நடித்துள்ள 'தணல்' முக்கியமாக உள்ளன. மேலும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரன் ஹீரோவாக நடித்த 'குமார சம்பவம்' படமும் அதே நாள் வெளியாகிறது. கூடுதலாக, 'யோலோ' மற்றும் 'பாம்' என்ற சிறுபட்ஜெட் படங்களும் ரிலீஸாகின்றன.

செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ் சினிமாவில் கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாள் கவின் நடிக்கும் 'கிஸ்' என்ற ரொமாண்டிக் படம், விஜய் ஆண்டனியின் 25வது படமான 'சக்தி திருமகன்', மற்றும் பா. இரஞ்சித் தயாரிப்பில் 'தண்டகாரண்யம்' உள்ளிட்ட மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகின்றன. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: