3 நாளில் ரூ. 37 கோடி... வசூல் வேட்டை நடத்தும் மதராஸி; 4-வது நாள் கலெக்சன் பாருங்க!

முதல் 4 நாட்களில் உலகளவில் மதராஸி திரைப்படம் 63 கோடி வசூலை மட்டுமே எட்டியூள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

முதல் 4 நாட்களில் உலகளவில் மதராஸி திரைப்படம் 63 கோடி வசூலை மட்டுமே எட்டியூள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
madharasi

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால், ஷபீர் கல்லரக்கல், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மதராஸி திரைப்படம் முதல் 4 நாட்களில் ஓரளவு வசூல் வேட்டையை உலகளவில் ஈட்டியுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், திங்கட்கிழமை வசூல் சுமார் 60 சதவீதம் டிராப் ஆகிவிட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த 'ஹீரோ' திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெறாததால், வசூலில் தோல்வியடைந்தது. ஆனால் தற்போது கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'லோகா' திரைப்படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.  இப்படம் இரு வாரங்களில் ரூ.150 கோடி வசூலித்திருக்கிறது மற்றும் ரூ.200 கோடி நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

ஆனால், முதல் 4 நாட்களில் உலகளவில் மதராஸி திரைப்படம் 63 கோடி வசூலை மட்டுமே எட்டியூள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 'சலம்பலா' பாடலில் சிவகார்த்திகேயன் வேகமாக நடனமாடி, சண்டைக் காட்சிகளில் அவருடைய முரட்டுத்தனமான தோற்றம் கவனத்தை ஈர்த்தாலும், அதைவிட டோல்கேட் சீனில் வித்யூத் ஜமால் மாட்ரிக்ஸ் ஹீரோவைப் போல் பறந்து பறந்து துப்பாக்கி சண்டை நடத்தும் அதிரடியும், இப்பாடத்துக்கு வேகத்தை கொடுத்தாலும், அதுவே பாக்ஸ் ஆபீஸை வெற்றிகரமாக நிரப்ப போதவில்லை என்பதுதான் நினைவு வருகிறது.

ஏ.ஆர். முருகதாஸுக்கு கம்பேக் படம் என்றுமே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு செலவு சுமார் ரூ.150 கோடி என கூறப்படும் நிலையில், படம் பிரேக் ஈவனை எட்டுமா? என்பது தற்போது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் எழும் முக்கியமான கேள்வி. குறிப்பாக, ‘மதராசி’ எனப் படத்திற்கு வைத்திருக்கப்பட்ட மாஸ் பேஸில் கூட, இதுவே போதுமான வெற்றியை கொடுக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.

Advertisment
Advertisements

மதராஸி திரைப்படம் முதல் 4 நாட்களில் சூர்யாவின் ரெட்ரோ 4 நாட்களில் செய்த சாதனையை முறியடித்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ரெட்ரோ திரைப்படம் 60.75 கோடி வசூலை முதல் 4 நாட்களில் ஈட்டிய நிலையில், மதராஸி திரைப்படம் 63 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிதாக வசூல் செய்யவில்லை என்றாலும் அதிரடியாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலேயே 100 கோடி வசூலை ஈட்டியது. அதுவும் முதல் 4 நாட்களில் 76.75 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக சினி டிராக் பாக்ஸ் ஆபீஸ் தகவலை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம் ரூ.300 கோடி வசூல் செய்ததைத் தொடர்ந்து, அவரது புதிய படம் 'மதராஸி' குறைந்தபட்சம் ரூ.200 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் 2 நாட்களில் ரூ.50 கோடி வசூலிக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டாலும், 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல் எட்டாமலே படம் தற்போது ரூ.63 கோடி வசூல் மட்டுமே செய்து தடுமாறி வருகிறது.

இதனால், படம் 'தலைவன்', 'தலைவி' போன்ற வெற்றியை பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' படத்தின் வசூலை எட்ட வேண்டுமென்றால், 'மதராஸி' படம் தொடர்ந்து 3 வாரங்கள் ஓடவேண்டும் என்கின்றனர். ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், அதற்குத் தகுந்த அளவிலான வசூலைப் பெற முடியாமல் இருப்பது சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. சாக்னிக் வெளியிட்ட தரவுகளின்படி, திங்கட்கிழமை ரூ.4 கோடி, இதுவரை இந்தியளவில் மொத்தம் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: