பொழியும் பண மழை... கோடிகளை குவிக்கும் மதராஸி; வெளியான முதல் நாள் வசூல் ரிப்போர்ட்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `மதராஸி' படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `மதராஸி' படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
madharasi first day collection Tamil News

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான `மதராஸி' படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ.12.8 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் தற்போது டாப் நடிகரான சிவகார்த்திகேயனை வைத்து 'மதராஸி' திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் நேற்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. ரஜினியின் 'கூலி' படத்துக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜூமேனன், 'டான்சிங் ரோஸ்' சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

ரஜினியின் 'தர்பார்' படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தமிழ் படம் 'மதராஸி' என்பதால், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் மொத்தம் 62.22 சதவீத தியேட்டர்களில் இப்படம் வெளியானது. தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் ரசிகர்களை 'மதராஸி' ஈர்த்த போதிலும், கர்காடக ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றே கூறலாம். அதே நேரத்தில், மும்பை, டெல்லியில் ஓரளவு ரசிகர்களை இப்படம் கவர்ந்து இழுத்திருக்கிறது.

இந்நிலையில், திரைப்பட வணிக மதிப்பீட்டாளர்கள் கணக்கீட்டின்படி, இந்திய அளவில் 'மதராஸி' திரைப்படம் முதல் நாளில் ரூ.13 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, திருச்சியில் 'மதராஸி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Entertainment News Tamil Sivakarthikeyan Ar Murugadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: