எனக்கு எல்லா மதங்களையும் மதிக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது – விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த மாதவன்

Madhavan Ranganathan: நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன்.

By: Published: August 17, 2019, 10:18:41 AM

நடிகர் மாதவன் தமிழில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவிலேயே முக்கிய இடத்திலுள்ள நடிகர். தனது கதாபாத்திரத்திற்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொள்ளும் மிக சில நடிகர்களில் மேடியும் ஒருவர். தற்போது நடந்துள்ள ஒரு விஷயம், மாதவனின் மத நல்லிணக்கத்தை வெளிக்காட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி தனது தந்தை ரங்கநாதன் மற்றும் மகன் வேதாந்த் ஆகியோருடன் தனது வீட்டில் நடந்த “பூனூல்” மாற்றும் நிகழ்வில் எடுத்துக் கொண்ட படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார் மாதவன். அதோடு, சுதந்திர தினம், ரக்‌ஷா பந்தன், ஆவணி அவிட்டம் ஆகிய மூன்றிற்கும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

அந்த புகைப்படத்தில் மாதவன் வீட்டில் இந்துக் கடவுள்கள் உடன் ஒரு சிலுவையும் இருந்தது. அதைப் பார்த்த ரசிகை ஒருவர், ”இந்துக் கடவுள்களுடன் ஏன் சிலுவை இருக்கிறது? நீங்கள் எனது மதிப்பை இழந்து விட்டீர்கள். எந்த தேவாலயத்திலாவது இந்தக் கடவுள்கள் இருக்கிறார்களா? இது எல்லாம் உங்களின் நாடகம்” என்று ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மாதவன், ”உங்களைப் போன்ற ஆட்களிடம் இருந்து நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என்று நம்புகிறேன். இந்த புகைப்படத்தில் உள்ள கோல்டன் டெம்பிளைப் பார்த்து நீங்கள் சீக்கியர் ஆகி விட்டீர்களா என்று நீங்கள் கேட்காதது எனக்கு வியப்பாக உள்ளது. நான் தர்காக்களில் ஆசி பெற்றுள்ளேன். ஏன், உலகில் உள்ள அனைத்து வழிப்பாட்டு தலங்களிலும் ஆசி பெற்றுள்ளேன். கடவுள்களின் படங்கள் சில பரிசாக வந்தவை, சில வாங்கியவை. என் வீட்டில் அனைத்து மதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனது சிறு வயதிலிருந்தே எனக்கு இது கற்பிக்கப்பட்டுள்ளது. ஆம், எனது அடையாளத்தைப் பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில் எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனைப் பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்குச் செல்வேன், குருத்வாராவுக்குச் செல்வேன். தேவாலயத்துக்குச் செல்வேன். அருகில் கோயில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது” என்று அந்த ரசிகைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் மாதவன்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Madhavan ranganathan reply for christian religion troll

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X