Advertisment
Presenting Partner
Desktop GIF

எல்.சி.யூ படத்தில் டெரர் வில்லனாக மாதவன்? அவரே கொடுத்த விளக்கம்!

எல்.சி.யூ படத்தில் வில்லனாக நடிப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
benz Madhavan

லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ள எல்.சி.யூ கான்சப்டில், அடுத்ததாக உருவாக உள்ள ஒரு புதிய படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்த மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

Read In English: Madhavan responds to speculations about joining Lokesh Cinematic Universe’s Benz: ‘I have no clue’

ஹாலிவுட் சினிமாவில் இருக்கும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் பல காமிக் புத்தகங்கள் மற்றும் காலங்காலமாக மிகவும் விரும்பப்படும் வலிமையான கேரக்டர்களை வைத்து உருவாக்கப்பட்டு வருகிறிது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதே போன்ற ஒரு யூனிவர்ஸை உருவாக்கியுள்ளர். தான் இயக்கிய கைதி கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக விக்ரம் படத்தில் தனது முந்தைய படமான கைதி படத்தை இணைத்திருந்தார்.

அதேபோல் விக்ரம் படத்திற்கு பிறகு இயக்கிய லியோ படத்தில் விக்ரம் படத்தின் காட்சிகளை இணைத்து யுனிவர்ஸை உருவாக்கி இருந்தார். இந்த யுனிவர்ஸ் படங்களில், கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற பெரிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசன், விஜய், சூர்யா முதல் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி வரை, முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எல்.சி.யூ வரிசையில் வரும் அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கு மற்ற இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Advertisment
Advertisement

அந்த வகையில்,இப்போது, லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் புதிய இயக்குனராக பாக்யராஜ் கண்ணன் இணைந்துள்ளார். இவர் இயக்க உள்ள பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் அறிவிப்பு வீடியே இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் எல்.சி.யூ வரிசையில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் மாதவனும் இதன் மூலம் எல்.சி.யூ வரிசையில் இணைவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்த படத்தில் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இது குறித்து மாதவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது எனக்குச் செய்தி. இது எவ்வளவு உற்சாகமாகத் தோன்றுகிறதோ, அதைப் போன்ற ஒரு எல்.சி.யூ பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். இந்த செய்தி எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் இது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் மாதவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மாதவன் எல்.சி.யூவில் இணைவது தொடர்பான தகவல் இணையத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. சமீபத்தில், பென்ஸ் படத்தின் மூலம் இண்டி சென்சேஷன் சாய் அபியங்கர், இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்திருந்தனர். 
தான் இயக்கி நடித்த ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் மாதவன் கடைசியாக தமிழ் திரையில் தோன்றினார். மித்ரன் ஜவஹரின் அதிர்ஷ்டசாலி, சஷிகாந்தின் தி டெஸ்ட் மற்றும் அன்ஷுல் ஷர்மாவின் டி டி பியார் டி 2 உள்ளிட்ட திரைப்படங்கள் தற்போது மாதவன் கைவசம் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madhavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment