By: WebDesk
Updated: January 25, 2020, 04:25:21 PM
madonna sebastian special photos cinema news kollywood updates – தேவதைகளுக்கு என்ன தெரியும் உன் அழகைப் பற்றி! – மடோனா செபாஸ்டியன் கியூட் புகைப்படங்கள்
மடோனா செபாஸ்டியன்…. மலையாள ரசிகர்களுக்கும் சரி, தமிழக ரசிகர்களுக்கும் சரி ஒரு ஜொள்ளு பேக்கேஜ் தான். இளசுகள் பலரும் இவரது படத்தை மொபைல் வால் பேப்பராக வைத்திருப்பதை நம்ம பார்த்திருக்க முடியும். மலையான டிவி சேனலில் புரோகிராம் ஒன்றை மடோனா தொகுத்து வழங்கிய போது, அதனை எதேச்சையாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பார்க்கிறார்.
மடோனாவின் எக்ஸ்பிரஷனில் இம்ப்ரஸ் ஆன அல்போன்ஸ், தனது அடுத்தப் படத்திற்கான ஆடிஷனுக்கு மடோனாவை அழைக்கிறார். ஆனால், நடிப்பில் அவருக்கு ஆர்வமில்லை. எனினும், சரி பார்க்கலாம் என்று ஆடிஷனில் கலந்து கொண்டவர் மேரி எனும் ரோலுக்கு செலக்ட் ஆனார். ஆனால், அதற்கு பிறகு இதைவிட ‘செலின்’ எனும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ரோலை மடோனாவுக்கு வழங்குகிறார் இயக்குனர் அல்போன்ஸ். அவர் ஆடிஷன் சென்ற அந்த படம் தான் பிரேமம். அனுபமா பரமேஸ்வரன் நடித்த ரோலுக்கு முதலில் செலக்ட் ஆனது மடோனா தான். ஆனால், கிளைமேக்ஸில் வரும் செலின் ரோலை மடோனாவுக்கு கொடுத்தார் இயக்குநர். பிரேமம் கிளைமேக்ஸில் ஹீரோவுடன் இணையும் ஜோடி கதாபாத்திரம் அது.
பிரேமம் மெகா வெற்றிக்குப் பிறகு, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், ப.பாண்டி, ஜூங்கா என்று அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக் கண்ணியானார். தற்போது சசிகுமாருடன் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திலும் ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.