மதுரை அஜித் ரசிகர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் 'யார்யா அவன்' என்று கேட்கவைத்து இறுதியில் சிரிக்கவும் வைத்திருக்கிறார் தீவிர தல வெறியர் ஒருவர்.
Advertisment
தெளிந்த நீரோடை போன்று அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பவர் அஜித். விஜய், சூர்யா போன்ற அவருடைய சமகால நடிகர்கள் ஏதாவது ஒரு கட்டத்திலாவது அரசியல் பேசும் சூழலில், 'ஓட்டு போடுவது தான் எனது உச்சபட்ச அரசியல்' என்று நோட்டீஸ் விட்டே அறிவித்தவர் அஜித்.
இப்படி தானுண்டு, தன் வேலையுண்டு பாலிசியில் சென்றுக் கொண்டிருக்கும் அஜித் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கியது போல், சமூக தளங்களில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக போஸ்டர் ஒன்று உலவிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் ஜெர்க் ஆக, யார்யா இவன் என்று வலைவீசி தேடத் தொடங்கினர். 'ஓவர் நைட்ல ஒபாமா' ஆனாலும், போஸ்டர் வெளியிட்ட அந்த நபருக்கு அஜித் ரசிகர்கள் தன்னை வெறி கொண்டு தேடிக் கொண்டிருந்த விஷயம் தெரிய வர, சமூக தளத்தில் தன் அடையாளத்தை வெளியிட்டார். அதில், "என் பெயர் சுரேஷ், அஜித்தின் வெறித்தனமான ரசிகன். நான் ஒரு டிசைனர் என்பதால், 'தல' மேலான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இப்படி டிசைன் செய்து வெளியிட்டேன். போஸ்டர்லாம் போடல. அது இப்படி பிரச்னையாகும்னு நினைக்கல.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
இதனால் 'தல'க்கு சங்கடத்தை ஏற்படுத்திட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அதிலும், மேயருக்கு நேரடி தேர்தல் இல்லை, மறைமுகத் தேர்தல் என்று அரசு அறிவித்தது கூட தெரியாமல் வெள்ளந்தியாக போஸ்டர் வெளியிட்டிருக்கிறார் இந்த வருங்கால மேயர்.