Advertisment

மில்லியன் வியூஸ்; மதுரை முத்துவின் ஹோம் டூர் வீடியோல என்ன ஸ்பெஷல்!

சின்னக் கலைவாணர் விவேக் மறைந்த நிலையில், அவர் நினைவாக முத்துவின் நண்பர் நட்டு வைத்த பலா மரம் துளிர்விட தொடங்கி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மில்லியன் வியூஸ்; மதுரை முத்துவின் ஹோம் டூர் வீடியோல என்ன ஸ்பெஷல்!

Madurai Muthu Home Tour Video News Tamil : தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு சின்னத்திரை பிரபலம் மதுரை முத்துவை தெரியாமல் இருக்காது. மதுரையிம் அரசம்பட்டி என்ற சிற்றூரை பூர்விகமாக கொண்டவர் மதுரை முத்து. விஜய் டிவி யின் கலக்கப்போவது யாரு, சன் டிவியின் அசத்தப் போவது யாரு, ஞாயிறு கலாட்டா என பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி, தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுரை முத்து. மனைவி லேகாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த மதுரை முத்துவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். எதிர்பாராத விதமாக, சில வருடங்களுக்கு முன்பு மனைவி கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், மனைவியின் தோழியும் பல் மருத்துவருமான நீத்துவை மணம் முடித்தார்.

Advertisment

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் மட்டுமில்லாது மதுரை வீரன், அகிலன் போன்ற திரைப்படங்களிலும் மதுரை முத்து நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் டிவி யில் ஒளிபரப்பான குக் வித் மோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட சில எபிசோடுகளிலேயே எலிமினேட் செய்யப்பட்டாலும், அவரது நகைச்சுவை திறத்தால் நிகழ்ச்சியை மெருகேற்ற ‘கெஸ்ட் பர்ஃபாமராக’ பங்கு பெற்றார்.

லாக்டவுன் சமயத்தில் யூடியூப் மூலமாக ரசிகர்களை கவர்ந்து, ட்ரெண்டிங்கில் இருந்து வரும் சின்னத்திரை பிரபலங்கள் வரிசையில், மதுரை முத்துவின் இணைந்துள்ளார். அந்த வகையில், Home Tour மூலம் ரசிகர்களுக்கு தனது வீட்டை சுற்றி காட்டி உள்ளார் மதுரை முத்து. பகுதி 1 , பகுதி 2 என வெளிவந்துள்ள மதுரை முத்துவின் Home Tour வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்து, சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மதுரை முத்துவின் விட்டில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்த கேள்வி இந்நேரம் உங்க மனசுக்குள்ள வந்துருக்கும். உங்களுக்காக தான் இந்த செய்தி.

மதுரை முத்துவின் வீட்டின் எழில் மிகுந்த புற அழகின் கழுகுப் பார்வையோடு அரம்பிக்கிறது ஹோம் டூர் வீடியோ. ரசிகர்களை ஹோம் டூர்க்கு அன்போடு வரவேற்ற மதுரை முத்து, சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் vlog மூலம் தனது வீட்டை சுற்றி காட்ட ஆரம்பித்தார். மதுரை முத்து வாசலுக்கு ஸ்பிரே அடிக்க, ஹோம் டூர் தொடங்கியது. ஏன் ஸ்பிரே அடிச்சேன்னு முத்து தனது பாணியில் நகைச்சுவையை தொடங்க, ஆரம்பமே ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து தான். ஏன் வாசலுக்கு ஸ்பிரே அடிச்சாருனு வீடியோவா பாத்து நீங்களே தெரிஞ்சிக்கோங்கா.

வீட்டின் வாசல் படியிலேயே விநாயகரும், திரிசூலமும் வீற்றிருக்க, வீட்டின் உள்ளும் மயில் சிலையும் சில கடவுள் சிலைகளும் இருக்கிறது. அம்மனுக்கு உகந்த வேம்பும், சிவனுக்கு உகந்த வில்வ மரமும் சுயம்பாக வளர்ந்து வருகிறதாம். காலை வேளைகளை மகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் கழிக்க பூத்து குலுங்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவாராம் மதுரை முத்து. லாக்டவுன் சமயத்துல வெளியில சுத்த முடியாத குறைய தீர்த்துக் கொள்ள இத செய்து வருகிறார் முத்து. ஹோம் டூர் முதல் பாகத்துல வீட்டின் வெளிப்புறத்தை சுற்றி காண்டும் முத்து, பறவைகள் இயற்கையாகவே வந்து தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகளை காட்டு உள்ளார்.

சின்னக் கலைவாணர் விவேக் மறைந்த நிலையில், அவர் நினைவாக முத்துவின் நண்பர் நட்டு வைத்த பலா மரம் துளிர்விட தொடங்கி உள்ளது. கருவேப்பிலை, ஆரஞ்சு, சீதா, செம்பருத்தி, செவ்வாழை என வீட்டுத் தோட்டம் ரசிகர்களின் கண்களுக்கு இதமாக அமைய, கோழிகளும், வாத்துகளும் அவர் விட்டின் தோட்டத்தில் மேய்கிறது. சில நாள்களில் ஹோம் டூர் இரண்டாம் பாகமும் வெளி வந்துள்ளது. மதுரை முத்துவின் தொன தொன மொக்க காமெடிகளும், முதல் பாகத்தில் காட்டியதையே மீண்டும் காட்டியதால் ரசிகர்கள் கொஞ்சம் போர் தான். இருந்தாலும், காந்திருந்ததுக்கு பலனாக வீட்டின் உள்புறத்தை காட்டிய பின், ரசிகர்கள் பரவசம் அடைந்தனர் என்றே கூறலாம். அவ்வளவு அழகான உள்புற அமைப்பு.

நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது, வெற்றிப் பெற்றது, மாரத்தான் ஓடியது என நூற்றுக்கணக்கான விருதுகளிஅ தனி அறையையே அலங்கரித்துள்ளது. அமெரிக்காவில் 10 இடங்களில் உரையாற்றிய நினைவான சீல்டுகளும் அதில் இடம்பெற்றிருந்தன. கடந்த 15 வருடங்களாக யாரியும் கஷ்டப்படுத்தாமல் சிரிக்க வைத்தே கட்டிய அழகான வீடு என முத்து கூற, ரசிகர்களின் மனதை தொட்ட நொடி அது. ஓய்வு அறையில் சோபாவும், அலமாரிகளும் கலை எழில் மிகுந்து கண்ணுக்கு கவர்ச்சி அளிக்கும் வகையில் முத்துவின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இறந்த முதல் மனைவியும், அவரின் தாய் தந்தையரின் புகைப்படங்களும் மைய அறையை அலங்கரித்துள்ளன. முத்து மறுமணம் செய்து கொண்ட புகைபப்டங்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. அமைதியை தூண்டும் அழகிய புத்தம் சிலை ஒன்றும் நம்மை கவரும். மயில் தோகையை விரித்தது போல, அழகிய மணிக்கூண்டு என இல்லம் முழுவதும் அவ்வளவு அழகான விசயங்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளோடு நையாண்டி செய்வதுடன் ஹோம் டூர் 2 நிறைவடைய, மீதம் இருப்பவற்றை பார்க்க பார்ட் 3-க்கு நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Tamil Viral Video Youtube Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment