Advertisment

மதுரையில் நடிகர் ரஜினி கோயில்... புதிய சிலையை பிரதிஷ்டை செய்த முன்னாள் ராணுவ வீரர்

ரஜினியின் 74 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாப்பிளை படத்தில் அவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தில் புதிய சிலை ஒன்றை அவரது ரசிகரும் முன்னாள ராணுவ வீரருமான கார்த்திக் பிரதிஷ்டை செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
rajini kovil

ரஜினி கோயிலில் புதிய சிலை பிரதிஷ்டை

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகரான முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோவில் ஒன்றை உருவாக்கி சில ஆண்டுகளாக வழிபாடும் செய்து வருகிறார்.

Advertisment

இந்திய ராணுவத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கார்த்திக், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அஞ்சலகம் ஒன்றில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனது தந்தை சிவன் வழியில் ரஜினியின் தீவிர ரசிகராக உள்ளார். இந்த நிலையில், தற்போது மேட்ரிமோனி இணையதளம் ஒன்றை நடத்தி வரும் கார்த்திக், அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து ரஜினிக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

அண்மையில் நவராத்திரி விழாவின் போது ரஜினி இதுவரை நடித்த திரைப்பட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு அமைத்திருந்தது பலரையும் வெகுவாக கவர்ந்தது.

ஒவ்வொரு நாள் காலையும், மாலையும் பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் (டிச.12) கொண்டாடப்படுகிறது.

Advertisment
Advertisement

இதனை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயிலில் இதுவரை இருந்த ரஜினி சிலைக்கு மாற்றாக மாப்பிள்ளை படத்தின் கதாபாத்திரத்தை மாடலாகக் கொண்ட புதிய உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.

நவராத்திரியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடித்த 170 திரைப்படங்களில் இருந்து அவரது கதாபாத்திரங்களை கொண்ட பொம்மைகள் உருவாக்கி வைத்திருந்தது குறிப்பிடதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Temple Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment