மாஃபியா தமிழ் ராக்கர்ஸ், mafia full movie download, mafia tamilrockers
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் க்ரைம் த்ரில்லரான மாஃபியா படத்தை ரிலீஸன்றே வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது. அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடித்த இந்தப் படத்திற்கு நல்ல ரிவ்வியூ கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Advertisment
தமிழ் சினிமா உலகத்திற்கு ஆகப் பெரிய வில்லனாக தமிழ் ராக்கர்ஸ் இருந்து வருகிறது. புதிய திரைப்படங்களை உடனுக்குடன் ஆன் லைனில் வெளியிட்டு அந்தப் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை பதம் பார்த்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.
இன்று (பிப்ரவரி 21) மகா சிவராத்திரியை முன்னிட்டு மாஃபியா, பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின. இந்தச் சூழலில் மாஃபியா படத்தை ரிலீஸ் ஆன முதல் நாள் சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட்டது.
Advertisment
Advertisements
அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடித்த மாஃபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார். இன்று தியேட்டர்களைத் தொட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்குள் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டதால் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸுக்கு எதிராக திரைத்துறையினர் சில முயற்சிகளை எடுத்தாலும், அவ்வப்போது இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு புதிய படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"