கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் லைகா புரொடக்ஷன் மீது மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிகிறது. ஆகவே லைகா தயாரிப்பு நிறுவனத்திலிருந்து எந்த திரைப்படங்களையும் வாங்க வேண்டாம் என உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது விநியோகஸ்தர்கள் சங்கம். காரணம் லைகா நிறுவனம் தயாரித்த, ரஜினிகாந்தின் தர்பார், 2.0 மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கார்கி கல்லூரி வன்முறை : தவறு செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது இது!
முன்னதாக ஜனவரி மாதம் தர்பார் வெளியீட்டின் போது, விநியோகஸ்தர்களிடமிருந்து ஒரு மாறுபட்ட அறிக்கை வந்தது. சிலர் ரஜினிகாந்தின் அந்தப் படத்தை வெற்றி எனக் குறிப்பிட்டனர். மற்றும் சிலரோ அதை தோல்வி என்றனர். இதற்கிடையே ‘மாஃபியா’ படம் வெளியாகும் தருணத்தில் லைகா நிறுவனம் மற்றும் கேரள திரைப்பட விநியோகஸ்தர்களிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இந்தியன் 2 விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர கையாண்டதா லைகா நிறுவனம்?
நோட்டீஸ்
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள, ‘மாஃபியா’ படத்தில் அருண் விஜய் ஹீரோவாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். பிரியா பவானி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லரான இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, கமலின் ‘இந்தியன் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகியப் படங்களின் தயாரிப்பு நிறுவனமும் லைகா தான்.