முடிவுக்கு வந்த பாக்யலட்சுமி; மீண்டும் விஜய் டிவியில் ரேஷ்மா: புதிய சீரியல் ப்ரமோ வைரல்!

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அதற்க்கு பதிலாக ஒரு புஷ்ஷிய சீரியல் வருகிறது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. அதற்க்கு பதிலாக ஒரு புஷ்ஷிய சீரியல் வருகிறது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
download (12)

விஜய் டிவியில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மனதில் தனி வரவேற்பு பெற்றது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகி பாக்கியா ஒரு குடும்பத் தலைவியாக தன்னுடைய அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு இடங்களிலும் போராடிக் கொண்டுள்ளார். இது பல பெண்களுடைய நிலைமை ஆக இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக பாக்கியா இருந்துள்ளார். 

Advertisment

பாக்கியா தன்னை சுற்றி எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் அதனால் மனம் தளராமல் ஒவ்வொரு இடத்திலும் முன்னேறி வருவது பல பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்தது. இந்த சீரியலில் பாக்கியாவாக நடிகை சுசித்ரா நடித்திருந்தார். அவர் ஏற்கனவே 'சைவம்' உட்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அவருக்கு கணவராக கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்திருந்தார். கோபி ஆரம்பத்தில் பலருடைய திட்டலை வாங்கிக் கொண்டிருந்தாலும் இறுதியில் அவருடைய மனமாற்றம் பல பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில் இந்த சீரியல் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 

அதற்கு பதிலாக என்ன புது சீரியல் வர போகிறது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அந்த வகையில் அடுத்ததாக ஒரு புதிய சீரியலின் ப்ரோமோ வந்துள்ளது. அது தன் 'மகளே என் மருமகளே' என்கிற சீரியல். இந்த புது சீரியல் தான் 15 ஆகஸ்ட் முதல் வர போகிறது. ஆனால் அது மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவித்து இருக்கின்றனர்.

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான ‘மகுவா ஓ மகுவா’ என்ற தொடர், தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ‘மகளே என் மருமகளே’ தொடராக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இத்தொடரில் பாக்கியலட்சுமி தொடரில் எதிர்மறை கதாபாத்திரமாக வந்த ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

Advertisment
Advertisements

மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது. 'பாக்யலஷ்மி' தொடரின் இடத்தை பிடிப்பதனால் இந்த சீரியலின் ஒளிபரப்புக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: